உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஸ்விங் ஸ்டேட்ஸ்- 7 மாகாணங்களிலும் வெற்றி பெற்றார் டிரம்ப்!

ஸ்விங் ஸ்டேட்ஸ்- 7 மாகாணங்களிலும் வெற்றி பெற்றார் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் 50 மாகாணங்களில், 'ஸ்விங் ஸ்டேட்ஸ்' என்றழைக்கப்படும், 7 மாகாணங்களிலும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 60, போட்டியிட்டனர். மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 'ஸ்விங் ஸ்டேட்ஸ்' என்றழைக்கப்படும் மாறி மாறி முடிவு வரக்கூடிய மாகாணங்களாக ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hksamy6s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் வெற்றி பெறுபவருக்கே அதிபராகும் வாய்ப்பு பிரகாசம் என்பது கணக்கு. அந்த மாகாணங்கள் அனைத்திலும் டிரம்ப் கூடுதல் ஓட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.1. ஜார்ஜியா- டொனால்டு டிரம்ப் 50.8 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.2. வடக்கு கரோலினா- டொனால்டு டிரம்ப் 51 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.3. பென்சில்வேனியா - டொனால்டு டிரம்ப் 51 சதவீதத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.4. அரிசோனா- டொனால்டு டிரம்ப் 51 சதவீதத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.5. மிச்சிகன்- டொனால்டு டிரம்ப் 53 சதவீதத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.6. நெவாடா- டொனால்டு டிரம்ப் 52 சதவீதத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.7. விஸ்கான்சின்- டொனால்டு டிரம்ப் 52 சதவீதத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர் அதிபர் ஆவார். மாகாணங்கள் வாரியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

எலக்டோரல் ஓட்டு முன்னிலை நிலவரம்!

டொனால்டு டிரம்ப்- 277கமலா ஹாரிஸ்- 226அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ram
நவ 06, 2024 11:42

கமலா ஹாரிஸ் கட்சி இங்கு இருக்கும் காங்கிரஸ் போல, ஜெயித்தால் அமெரிக்காவுக்கு ஆபத்து


sugadhan
நவ 06, 2024 09:49

கமலா ஹாரிஸ் ஒரு இந்தியா விரோதி. இவர் ஜெயிப்பது இந்தியாவுக்கு தலைவலி தான் தரும். தமிழ் செண்டிமெண்ட் எல்லாம் ஒன்றும் கிடையாது. இவரைப்பற்றி படியுங்கள் புரியும். தோற்பது இறைவன் அருள் என்று சொல்வோம்.


வைகுண்டேஸ்வரன்
நவ 06, 2024 08:45

கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளி நபர் அல்ல. தமிழ் நாடு எங்கே இருக்கு என்று கூட அவருக்குத் தெரியாது. அவரோட சொந்த ஊரின் பேரை உச்சரிக்கக் கூட அவரால் முடியாது. ஹாரிஸ் என்கிற கிறிஸ்தவரை சர்ச் ஒன்றில் கல்யாணம் பண்ணிண்டார். இவரு இந்தியாவிற்கு வந்ததே இல்லை


R SRINIVASAN
நவ 06, 2024 08:24

கமலா ஹாரிஸ் இந்திய கலாச்சாரத்தை கடைபிடிக்கவில்லை .அதனால் அவர் வரவேண்டாம் .


Anvar
நவ 06, 2024 08:12

அந்த அம்மாவுக்கு டுமீல் நாடு எங்க இருக்குன்னே தெரியாது .. இந்திய வம்சாவளி ஒன்னு வைத்து ஓட்ட கூடாது அவர் ஒரு அமெரிக்கன் கடந்த 4 ஆண்டுகளில் அவர் இந்தியா பற்றி பெருசா எதுவும் பேசியதே இல்லை இவிங்க எப்போ ஆட்சிக்கு வந்தாலும் உலகத்துல போர் இருந்துகிட்டே இருக்கு டொனால்ட் வரட்டும்


MARI KUMAR
நவ 06, 2024 07:49

கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும். அவர் தான் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.


தங்கப்பாண்டி,பாலமேடு
நவ 06, 2024 08:10

இந்தியவம்சாவளியை சேர்ந்தவரான கமலாஹாரிஸ் ஒரு தடவையாவது தான் பிறந்த ஊருக்கு வந்திருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு கருத்தை பதிவிடவும்.


சமீபத்திய செய்தி