உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்: 8 பேர் பரிதாப பலி; வாலிபர் வெறிச்செயல்

சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்: 8 பேர் பரிதாப பலி; வாலிபர் வெறிச்செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் 21 வயது மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வுக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் 21 வயது வாலிபர் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இதில், 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டனர். சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.ஏற்கனவே, கடந்த நவ.,12ம் தேதி சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
நவ 17, 2024 20:39

இதைத்தான் ஸ்டாலின்சொன்னார் அன்றே திருட்டு திராவிட மாடல் உலகம் பூராவும் என்று.நிச்சயம் இந்த கொலைகளுக்கு காரணம் சீனாவில் அடக்கப்பட்டு வாழும் முஸ்லிம்களே நிச்சயமாக. அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இப்படி செய் என்று சொல்லப்பட்டிருக்கின்றது அவ்வளவே. அது தான் கார் விபத்து-35 கொலை, கத்திக்குத்து-8 பிளஸ் கொலை


Ms Mahadevan Mahadevan
நவ 17, 2024 09:32

திராவிட மாடல் அங்கும் பரவி விட்டது என்று கருத்து போட சிலர் வருவார்களே? இன்னும் காண வில்லை


Ramesh Sargam
நவ 17, 2024 12:20

அதான் மறைமுகமாக நீங்கள் போட்டுவிட்டீர்களே… நீங்க ரொம்ப சாமர்த்தியம்.


பேசும் தமிழன்
நவ 17, 2024 08:06

தேடப்படும் குற்றவாளி..... ஒரு வேளை மார்க்க ஆளாக இருப்பானோ ???


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 17, 2024 09:13

அங்கே ... அடக்கமாக இருக்கும்.. துள்ளினால் உடலில் உயிர் இருக்காது ......


MARI KUMAR
நவ 17, 2024 07:29

வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


புதிய வீடியோ