உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காங்கோவில் படகு கவிழ்ந்து 86 பேர் பலி

காங்கோவில் படகு கவிழ்ந்து 86 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கின்ஸ்ஹசா: காங்கோவில் படகு கவிழ்ந்து 86 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.ஆப்ரிக்காவில் பல நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால், அங்கிருக்கும் மக்கள் ஏராளமானோர் உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதற்காக செல்கின்றனர். அதில் சட்டவிரோதமாக படகில் செல்கின்றனர். அப்படி செல்கையில் பலர் படகு கவிழ்ந்து உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில், காங்கோ நாட்டில் வடமேற்கில் உள்ள ஈக்வடார் என்ற மாகாணத்தில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 86 பேர் உயிரிழந்தனர். அதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் மாணவர்கள். இந்த படகு விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதிகளவில் ஆட்களை ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டதுமே காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mani . V
செப் 13, 2025 04:18

இதை ஏன் தமிழ்நாட்டு செய்தி தலைப்பில் போட்டு உள்ளீர்கள் - என்னமோ இதுக்கும் சம்பந்தம் இருப்பது மாதிரி? அவர் இப்பொழுது தான் வெளிநாட்டு முதலீடுகளையும், மருத்துவப் பரிசோதனையையும் முடித்து விட்டு திரும்பியுள்ளார்.


Kulandai kannan
செப் 12, 2025 20:13

1500 ஆண்டு மிஷனரிகளின் மதமாற்ற சாதனை இது.


Tamilan
செப் 12, 2025 20:12

அதனால் மோடிக்கோ தமிழகத்துக்கோ என்ன பிரச்சினை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை