உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 9 பஸ் பயணியர் பாக்.,கில் படுகொலை

9 பஸ் பயணியர் பாக்.,கில் படுகொலை

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒன்பது பயணியர் கொல்லப்பட்டனர்.லாகூரில் இருந்து இரு பஸ்கள் பலுசிஸ்தானின் குவெட்டா நகருக்கு சென்றது. பலுசிஸ்தான் மாகாணம் சோப் மாவட்டத்தில் உள்ள சுர் - தகாய் தேசிய நெடுஞ்சாலையில் அந்த பஸ்கள் சென்றபோது, இரு பஸ்களிலும் துப்பாக்கி ஏந்திய பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் ஏறி பயணியரின் அடையாள அட்டைகளை சோதனையிட்டனர். பின் அதில் இருந்த பஞ்சாப் பயணியர் ஒன்பது பேரை கடத்திய பயங்கரவாதிகள் அவர்களை சுட்டுகொலை செய்தனர். குவெட்டா, லோரலாய், மாஸ்துங் பகுதியிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதை பலுசிஸ்தான் பாதுகாப்பு படையினர் முறியடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை முன்னணி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை