உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதுவா... அதாவது... அதுதாங்க அது!...: இண்டியா கூட்டணிக்கு ராகுல் தந்த விளக்கம்

அதுவா... அதாவது... அதுதாங்க அது!...: இண்டியா கூட்டணிக்கு ராகுல் தந்த விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'இண்டியா' கூட்டணியா 'இண்டி' கூட்டணியா என்ற குழப்பம் குறித்து அமெரிக்காவில் நிருபர் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல், தட்டுத்தடுமாறி அளித்த விளக்கம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து 'இண்டியா' (ஆங்கிலத்தில் I.N.D.I.A) என்ற கூட்டணியை உருவாக்கின. இதன் விரிவாக்கம்: I - Indian, N - National, D - Developmental, I - Inclusive, A - Alliance. அதாவது, இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி. இந்த கூட்டணி கணிசமான இடங்களை பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த முடியவில்லை. தொடர்ந்து 3வது முறையாக தே.ஜ., கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6xxh89k3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் பிரசாரத்தின்போது 'இண்டி' கூட்டணி என்றே பா.ஜ., கட்சியினர் கூறிவந்தனர். அதாவது, INDIA என்ற பெயரில் உள்ள 'ஏ' எழுத்து தான் கூட்டணி என்ற சொல்லை குறிக்கிறது என்பதால் அதனை 'இண்டியா' கூட்டணி எனச்சொல்வது தவறு என்பது அவர்களின் வாதம்; அதுதான் உண்மையும் கூட.ஆனால், எதிர்க்கட்சியினர் இது 'இண்டியா' கூட்டணி தான் என முட்டுக்கொடுத்தனர். இந்த நிலையில் தற்போது அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், வாஷிங்டனில் நேஷனல் பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றார். இந்திய வம்சாவளியினர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். ராகுலிடம் நிருபர் ஒருவர், 'உங்கள் இண்டி கூட்டணியில் பல கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை. எப்படி ஆட்சி அமைத்து நாட்டை நிர்வகிப்பீர்கள்?' எனக் கேட்டார்.

அது... அது வந்து...

இதற்கு, ''அது இண்டி கூட்டணி இல்லை; இண்டியா கூட்டணி. பா.ஜ., சொல்வது தான் இண்டி கூட்டணி'' என ராகுல் பதிலளித்தார். அப்போதும் நிறுத்தாத நிருபர், ''அப்படியென்றால் கூட்டணி பெயரில் உள்ள 'ஏ' எழுத்து என்ன பொருள் தருகிறது?'' என மறு கேள்வி கேட்டார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ராகுல், ''அது... அது வந்து... ஏ என்பது அலையன்ஸ் (கூட்டணி)'' என சமாளித்தார். ''அப்புறம் எப்படி இண்டியா கூட்டணி என்பீர்கள்?'' என விடாமல் கேள்விகளால் விரட்டினார் நிருபர்.

இதுதான் எங்கள் ஐடியா

இதனை கவனித்த நேர்காணல் நடத்திய நபர், புன்சிரிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பதிலளித்த ராகுல், ''அது அப்படியில்லை. எங்கள் கூட்டணியின் முழு ஐடியாவும், இந்தியா தாக்கப்படுகிறது என்பதை இந்திய மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது தான். அந்த ஐடியா வெற்றிகரமாகவும் அமைந்தது. பா.ஜ.,வினர் பொதுவாக இண்டி கூட்டணி என்றே கூறுகின்றனர். ஆனால் இந்தியா முழுவதும் எங்களை இண்டியா கூட்டணி என்றே சொல்கின்றனர்'' என்றார்.இண்டியா கூட்டணி என ராகுல் அளித்த இந்த விளக்கம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

M Ramachandran
செப் 14, 2024 18:37

மேல் மாடியில் உள்ள மசாலாவிற்கு தகுந்த படி தான் பதில் கூற முடியும். தற்போது கான்க்ரசைய தவிர அவர்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் இவ்வளவு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதில்லை. பெயிலில் உள்ளதை ஞாபக படுத்தியதினால் ஆத்திரம் கண்னை மறைகிறது. அதனால் பிதற்ற தொடங்கி விட்டார்கள்


Muneswaran1949 Muneswaran
செப் 13, 2024 17:15

மோடிக்கு இந்தியன் பத்திரிக்கை நிருபர் எல்லாம் விலைபோன ஊடகம் என்று தெரியும்


Suppu Nachi
செப் 12, 2024 05:00

The very fact that he ridicules India everytime he visits abroad creats a doubt about his nationality in everybodys mind..


R K Raman
செப் 11, 2024 21:49

உங்கள் அறிவாற்றல் வியக்க வைக்கிறது... இப்படி முட்டுக் கொடுக்க வேண்டுமா?


Lion Drsekar
செப் 11, 2024 18:44

இதே ஒன்று பாமரனோ அல்லது வேறு யாராவது இப்படி வெளிநாடுகளுக்கு சென்று இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியிருந்தால் அவரது வாழ்க்கை என்னவாகியிருக்கும், . இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது தேர்தல் கமிஷன் தான், இவர்களை தான் இதுபோன்று தவறான பாதையில் நாட்டை எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் . இதுபோன்றவர்களின் பதவியை ஏன் பறிக்கக்கூடாது, எல்லோருமே இப்படி செய்ய ஆரம்பித்தால் நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் . வந்தே மாதரம்.


M S RAGHUNATHAN
செப் 12, 2024 14:45

தேர்தல்.ஆணையம் மட்டும் அல்ல. தற்போதைய உச்ச நீதி மன்றமும்.தான். அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப் பட்டு, வேறு சில வழக்குகளில் பிணை பெற்று இருக்கும் ஒருவருக்கு ஒரு நீதி மன்றம் அளித்த தண்டனையை, அதை உறுதி செய்த உயர்நீதி மன்றத்தின் ஆளுமையை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும். உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புகள் மிகவும் வியப்பாக இருக்கிறது. இப்போது ராகுல் தண்டிக்கப்பட்டவரா இல்லையா என்று தெரியவில்லை. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்தால் இவ்வளவு நாள் அவருக்கு வழங்கப் பட்ட சலுகைகள் முறைகேடானவை என்று தெளிவாகிறது. இந்த சலுகைகள் மக்களின் வரிப் பணத்தில் இருந்து கொடுக்கப் பட்டவை. ஆகவே தவறு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.


Dharmavaan
செப் 11, 2024 16:46

உலகம் பூராவும் நம் மானம் போகிறது


Apposthalan samlin
செப் 11, 2024 16:23

ராகுல் காந்தி குறைந்தது பத்திரிகையாளர்களை நம் நாட்டிலும் அயல் நாட்டிலும் சந்திக்கிறார் .ஆனால் பிரதமர் 11 வருடம் கடந்தும் இன்னும் ஒரு தடவையாவது பத்திரிகை யாளர்களை சாதித்து இருக்கிறரற . ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படவேண்டும் ? ராகுல் விவாதத்துக்கு மோடியே அழைத்தார் ஏன் வரவில்லை ?


enkeyem
செப் 11, 2024 19:47

ராகுல் சந்தித்து என்ன சாதித்துவிட்டார்? ஒவ்வொரு வெளிநாட்டு விஷயத்திலும் இந்தியாவின் பெயரை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்.


Suppu Nachi
செப் 12, 2024 04:49

Meeting the the media full of biased ones is a waste of time.. He is wise enough to avoid such things...


Ms Mahadevan Mahadevan
செப் 11, 2024 15:59

சுதந்திரம் வாங்கி 77 ஆண்டுகள் ஆகியும் இஇன்னுன்ம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு ?


rsudarsan lic
செப் 11, 2024 15:45

அல்லியன்ஸ் என்பது உள்ளே இருந்தால் என்ன வெளியே இருந்தால் என்ன? அமெரிக்க நிருபரின் அறிவிண்மையை வியக்கிறேன்


enkeyem
செப் 11, 2024 19:56

I - Indian, N - National, D - Developmental, I - Inclusive, A - Alliance. அதாவது i.N.D.I. Alliance. இ ண் டி கூட்டணி. அப்புறம் எதற்கு மேலும் ஒரு alliance? பப்பு மாதிரி ஒருத்த வேண்டாம்


sankar
செப் 11, 2024 15:33

இந்திய திருநாட்டிற்கு ஆபத்தான ஒரு இந்த ராகுல்


Suppu Nachi
செப் 12, 2024 04:57

Absolutely... He tarnishes the image of India duty his visits abroad. His inane utterances are aimed at ridiculing our PM, but in the process he ends up as a comedian


முக்கிய வீடியோ