உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிலவுக்கு புறப்பட்டது தனியார் ராக்கெட்

நிலவுக்கு புறப்பட்டது தனியார் ராக்கெட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கேப்கனாவெரல்: அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, அந்நாட்டின் தனியார் லேண்டர் ராக்கெட், நேற்று நிலவுக்கு ஏவப்பட்டது. அது, வரும் 22ம் தேதி நிலவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நாசா எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அங்குள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தனியார் நிறுவனமான, 'ஸ்பேஸ் எக்ஸ்' பால்கான் ராக்கெட்டை நேற்று ஏவியது. இதில் உள்ள ரோபோ விண்கலம் வரும் 22ம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால், நிலவின் மேற்பரப்பை தொட்ட முதல் வணிக வாகனம் என்ற பெருமையை பெறும்.அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் தான் இதுவரை நிலவில் தரையிறங்கிஉள்ளது. தனியார் நிறுவனம் எதுவும் இதுவரை நிலவை தொட்டதில்லை. அமெரிக்கா மட்டுமே நிலவுக்கு, அப்பல்லோ 17 வாயிலாக கடந்த 1972 டிசம்பரில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தஞ்சை மன்னர்
பிப் 16, 2024 21:35

நீங்க இவ்வளவு செலவு செய்து அங்கே அனுப்பி என்ன பயன் கண்டீர்கள் என்று இதுவரை யாரும் உண்மை சொல்லவில்லை அங்கே என்ன இருக்கு என்ற முழுமையான தகவல் இதுவரை அனுப்பிய எந்த நாடும் வெள்ளை அறிக்கை விடவில்லை அப்புறம் இதற்க்கு எதற்கு இவ்வளவு செலவு செய்து அனுப்பவேணும் யாருக்காக இவ்வளவு பணம் சென்றடைகிறது என்று தெரியவில்லை இதுவரை இந்திய உட்பட பல நாட்டினரிடம் இருந்து இதற்க்கு வேண்டு அமெரிக்கா பெற்ற தொகை 5.5 ட்ரிலியன் ஆனால் மனித குலத்துக்கு என்ன பிரயோஜனம் அம்மசல்லிக்கு உதவவில்லை நிலவின் ஈர்ப்பு விசையினால் மட்டுமே பூமி குலுங்காமல் இருக்கின்றது என்பதை புறநா காலத்திலேயே கண்டறியப்பட்டு விட்டார்கள் ஆனால இப்போதுதான் அதையே அதிசயமாக கண்டறிந்து உள்ளனர் பூமியின் இத்தனை ட்ரிலியன்செலவு செயது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி