உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 30 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை... யார் இந்த ஜொனாதன் எட்வர்ட்ஸ்?

30 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை... யார் இந்த ஜொனாதன் எட்வர்ட்ஸ்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மும்முறை தாண்டுதலில் பிரிட்டனைச் சேர்ந்த ஜொனாதன் எட்வர்ட்ஸின் சாதனை, 30 ஆண்டுகளாகியும் முறியடிக்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது.உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் செப்டம்பர் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் டோக்கியோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பல்வேறு சாதனைகளை படைக்க காத்திருக்கும் நிலையில், தடகளப் போட்டியில் 30 ஆண்டுகளாகியும் யாரும் முறியடிக்க முடியாத சாதனையை நினைவு கூர்வோம்.தடகளப் போட்டியில் மும்முறை தாண்டுதல் பிரிவில் பிரிட்டனைச் சேர்ந்த ஜொனாதன் எட்வர்ட்ஸ்,59, தனக்கு 29 வயதாக இருக்கும் போது படைத்த சாதனைக்கு இன்னும் சொந்தக்காரராக இருந்து வருகிறார்.இவர், 1995ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் அதிகபட்சமாக, 18.29 மீ தூரம் தங்கப்பதக்கம் வென்றார். இது உலக சாதனையாகும். அதுமட்டுமில்லாமல், 3 வெவ்வேறு போட்டிகளில் 3 முறை உலக சாதனை படைத்தார். அதே ஆண்டின் ஜூனில் 18.43 மீட்டர் என்ற தூரத்தை கடந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். எனினும், சாதகமான காற்றின் வேகம் காரணமாக இந்த சாதனை உலக சாதனையாக ஏற்கப்படவில்லை.இதுவரையில் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றிருந்தாலும், அவர்களில் 8 வீரர்கள் மட்டும் 18 மீட்டர் என்ற தொலைவை கடந்து குதித்துள்ளனர். 2015ம் ஆண்டு அமெரிக்க தடகள வீரர் கிறிஸ்டியன் டெய்லர், உலக சாதனைக்கு மிகவும் நெருக்கமான தொலைவில் (10 சென்டி மீட்டர் வித்தியாசம்) குத்துள்ளார். இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை