உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆதாரை ஏற்றுக் கொள்ள வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆதாரை ஏற்றுக் கொள்ள வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12வது ஆவணமாக ஆதாரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பீஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, கடந்த ஜூலை மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு, மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேரின் பெயர்களை நீக்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ky4d8gb0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்குநிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர் மற்றும் இரு வேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்கள் என நீக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஆதாரை ஆவணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், ஆதாரை சட்டப்பூர்வ குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது என தேர்தல் கமிஷன் தெரிவித்து இருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், பீஹாரில் வாக்காளர் பட்டியல் சேர்த்தல் மற்றும் நீக்கும் பணிக்கு ஆதார் அட்டையை 12வது ஆவணமாக தேர்தல் ஆணையமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.ஆனால், தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள 7.24 கோடி வாக்காளர்களில் 99.6 சதவீதம் பேர் ஏற்கனவே ஆவணங்களை சமர்ப்பித்து விட்டனர். தற்போது ஆதாரை சேர்ப்பதால் எந்த பலனும் இருக்காது என தெரிவித்தார்.இதனையடுத்து நீதிபதிகள், ஆதார் அட்டையின் உண்மைத்தன்மையை சரி பார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும், குடியுரிமைக்கான ஆவணமாக அதனை பயன்படுத்தக்கூடாது. ஆதாரை 12வது ஆவணமாக ஏற்றுக் கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Suppan
செப் 08, 2025 21:27

பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்றநாடுகளிலிருந்து கள்ளத்தனமாக ஊடுருவி வந்தவர்களுக்கும் இகாங்கிரஸ் திருணமூல் காங்கிரஸ் தயவு ஆதார் கொடுக்கப்பட்டது. அப்பொழுதே உச்ச நீதி மன்றம் ஆதாரை குடியுரிமைக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றது.


venugopal s
செப் 08, 2025 21:21

என்னடா இது, நமது உழைப்பு எல்லாம் கடைசியில் இப்படி பொசுக்கென்று போய் விட்டது!


Gnana Subramani
செப் 08, 2025 20:02

கருவிழி, கை ரேகை பதிவை கொண்டு தானே ஆதார் வழங்கப் படுகிறது. இதில் தவறு நடந்து இருந்தால் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது


Nalla Balu
செப் 08, 2025 19:50

உச்ச நீதிமன்றம் ஆதாரை 12 வது ஆவணமாக சேர்க்க உத்திரவிட்டுள்ளதா? அல்லது பரிந்துரைத்துள்ளதா?


Keshavan.J
செப் 08, 2025 19:59

This news is misleading. SC told to consider genuine Aadhar cards not the opposite way.


Varadarajan Nagarajan
செப் 08, 2025 19:49

இதற்க்கு முன்பு வங்கி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும், ரேஷன் அட்டையுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும், பான் என்னுடன் ஆதாரை கட்டாயம் இணைக்கவேண்டும் என மத்திய அரசு கூறியபோது தாக்கல்செய்யப்பட்ட பல வழக்குகளில் அதனை கட்டாயப்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை மறந்துவிட்டதா? ஊழல்களை தடுப்பதற்காக மத்திய அரசு கட்டாயப்படுத்தியதால் அதுபோன்ற உத்தரவிட்டதா? தற்பொழுதும் போலி வாக்காளர்களை நீக்கவேண்டும் என நடவடிக்கையெடுப்பதால் இதுபோன்ற உத்தரவா? ஏன் இதுபோன்ற தீர்ப்புகள் வருகின்றன என புரியவில்லை?


VENKATASUBRAMANIAN
செப் 08, 2025 19:31

தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியுமா. அறிவுரை மட்டுமே கூறமுடியும். போலி இதனை வைத்து எப்படி குடியுரிமையை நிர்ணயிக்க முடியும். பிறப்பு சான்றிதழ் மட்டுமே சரியான ஆவணம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 08, 2025 19:30

ஆதாரை ஏற்றுக் கொள்ளணும், சரி. எந்த பூத் என்பதில் பிரச்சினை செய்து வாக்கை போடவிடமல் திருடி விடுவார்கள்


திகழ்ஓவியன்
செப் 08, 2025 19:29

ஹா ஹா தொடங்கிவிட்டது பீஹார் இல் NDA க்கு தோல்வி முகம் தான்


Pandi Muni
செப் 08, 2025 19:46

தெரிஞ்சிடுச்சா? கள்ள குடியேறிகளுக்கும் இனி ஓட்டுரிமை உண்டுன்னு


தத்வமசி
செப் 08, 2025 19:25

ஒரு முறை ஆதார் தேவையில்லை, ஆதார் ஒரு ஆதாராமா ? என்றெல்லாம் கேட்டுவிட்டு, இப்போது ஆதாரை ஏன் ஆதரிக்கவில்லை என்று கேட்டால் ? ஒருவரின் முகத்தைப் பார்த்தா முடிவுகள் எடுக்க முடியும் ? இல்லை சட்டங்களைப் பார்த்தா ?


Kanakala Subbudu
செப் 08, 2025 19:01

மேலும் ஒரு குறுக்கீடு. உச்ச நீதிமன்றத்தின் ஆட்சி நடக்கிறதோ என்று எண்ணம் வரவழைக்கும் ஒரு உத்தரவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை