உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 15 மனைவியர், 30 குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற ஆப்ரிக்க மன்னர்: ஸ்தம்பித்தது அபுதாபி விமான நிலையம்

15 மனைவியர், 30 குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற ஆப்ரிக்க மன்னர்: ஸ்தம்பித்தது அபுதாபி விமான நிலையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுதாபி : ஆப்ரிக்க மன்னர் ஒருவர், 15 மனைவியர், 30 குழந்தைகள், 100 வேலையாட்கள் என, 150 பேர் அடங்கிய பரிவாரங்களுடன் வந்திறங்கியதால் அபுதாபி விமான நிலையம் ஸ்தம்பித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து, அரைகுறை ஆடையுடன் ஒருவர், பல பெண்களுடன் தனி விமானத்தில் வந்திறங்கினார். அவரைச் சுற்றியிருந்தவர்கள் மரியாதையாக வணங்கி, வீர வணக்கம் செலுத்தும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரது வருகையால் அபுதாபி விமான நிலையத்தின் மூன்று முனையங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நபர் வேறு யாருமல்ல, தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி தான் அவர். ஆப்ரிக்காவின் கடைசி முழு அதிகார மன்னராக விளங்கும் இவர், 1986 முதல் எஸ்வாட்டினியை ஆண்டு வருகிறார்.தற்போது 57 வயதாகும் மன்னர் மஸ்வாட்டி, அவருடைய நாட்டின் பாரம்பரிய புலித்தோல் உடையில் தோன்ற, அவரது 15 மனைவியர், 30 குழந்தைகள் வண்ணமயமான ஆப்ரிக்க உடைகளில் அழகாக காணப்பட்டனர். பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நடத்துவதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அவர் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இவரது தந்தை, முன்னாள் ஸ்வாசிலாந்து மன்னர், 125 மனைவியர் மற்றும் 210 குழந்தைகள், 1,000 பேரக்குழந்தைகளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய மன்னர் மூன்றாம் மஸ்வாட்டிக்கு 30 மனைவியர் உள்ளனர். ஆனால் இந்த பயணத்தில், 15 மனைவியர் மட்டுமே உடன் வந்தனர். இவருக்கு, 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 'ரீட் டான்ஸ்' எனும் பாரம்பரிய விழாவில் புதிய மனைவியை மன்னர் தேர்ந்தெடுக்கும் பழக்கம், உலகளவில் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.மன்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வர, எஸ்வாட்டினியில், 60 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். நாட்டில் வறுமை மற்றும் பொருளாதார சவால்கள் இருக்கும் நிலையில், மன்னர் மஸ்வாட்டி உள்நாட்டிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vee srikanth
அக் 07, 2025 10:16

மன்னர் மஸ்வாட்டி, அவருடைய நாட்டின் பாரம்பரிய புலித்தோல் உடையில் - ஆப்பிரிக்காவில் புலித்தோலா?


கூத்தாடி வாக்கியம்
அக் 07, 2025 10:15

ஆப்பிரிக்க காட்டு மரமே.


baala
அக் 07, 2025 09:59

இதெல்லாம் முக்கியமான செய்தி.


baala
அக் 07, 2025 09:58

வாங்கிய காசுக்கு மேல கூவுறாங்களா இங்க


Kasimani Baskaran
அக் 07, 2025 04:10

மன்னர் அந்தஸ்து இல்லாமலே மூன்றை வைத்து பாதி மாநிலத்தை வளைத்துப்போடும் லாவகம் இவருக்கு வர வாய்ப்பில்லை. திராவிடன் திராவிடன்தான்...


Senthoora
அக் 07, 2025 06:22

யாரு திராவிடரை வளர்த்துவிட்டு, இன்றுவரை திராவிடம் வளர்ந்திருக்கு, யார் தப்பு,


Raj S
அக் 07, 2025 01:45

கட்டுமரம் மாதிரி போல


Ramesh Sargam
அக் 07, 2025 01:07

ஒண்ண கட்டிண்டு நான் படுற பாடு அப்பாப்பா... இந்த மன்னன் உண்மையில் மிகவும் போற்றப்படவேண்டியவன். இந்த மன்னனுக்கு இப்பத்தான் 57 வயது. இன்னும் பல கல்யாணம் இருக்கு, பிள்ளைக்குட்டிகள் இருக்கு. ஜமாய் தலைவா...


panneer selvam
அக் 06, 2025 22:58

When people are struggling for food , their king is enjoying the best of the world . Whom we have to blame ? of course , it is the people


Sun
அக் 06, 2025 22:47

மூணு பெரியதா? இல்லை முப்பது பெரியதா? மூணுதான் பெரியது. அதெப்படி? முப்பதுதானே பெரியது? அது பள்ளிக்கூட கணக்கு. இது வேற கணக்கு!


வாய்மையே வெல்லும்
அக் 06, 2025 22:46

மன்னனுக்கு அடித்தது ஜாக் பாட் .. மன்னா அனுபவி ராஜ அனுபவி .. தான் சொல்ல தோணுது நீங்க பொய்க்குண்டு புறவாசலையே மிஞ்சிட்டேர் போங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை