உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமைதி வழியில் போருக்கு முடிவு: ரஷ்யா அதிபர் புடின் விருப்பம்

அமைதி வழியில் போருக்கு முடிவு: ரஷ்யா அதிபர் புடின் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: உக்ரைன் உடனான போரை அமைதியான வழிகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்தார்.சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ரஷ்யா உடன் நடந்து வரும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில், ரஷ்யாவில் அக்டோபர் 22,23ம் தேதிகளில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இதுவரை மொத்தம் 15 பிரிக்ஸ் மாநாடுகள் நடந்துள்ளன.புடின் அழைப்பின் பேரில் , பிரதமர் மோடி அக்டோபர் 23ம் தேதி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்கிறார். இது குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் புடின் கூறியதாவது: மோதலை தீர்ப்பதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளது. உக்ரைன் உடனான போர் குறித்து தொடர்ந்து கவலைகள் தெரிவித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி.பிரதமர் மோடியுடன் பேசும் போது, ஒவ்வொரு முறையும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். உக்ரைன் உடனான போரை அமைதியான வழிகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நாங்கள் அல்ல, ஆனால் உக்ரைன் தரப்புதான் அதை செய்ய வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. ரஷ்யா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா தான். இவ்வாறு புடின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
அக் 19, 2024 17:08

மெடல் குத்தி விட இங்கே ரெடி...


Ramesh Sargam
அக் 19, 2024 12:17

இதைத்தானே மோடி அவர்கள் உங்களை பார்க்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் கூறுவதை பொருட்படுத்தவில்லை. இப்பொழுது அதிக மனித உயிர்கள் போனபிறகு, அதிக பொருட்சேதம் ஏட்பட்டபிறகு ஞானோதயம். Too late.


vbs manian
அக் 19, 2024 09:13

உக்கிரைனில் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி விட்டு அமைதி பேச்சு என்று சொல்கிறார். நல்ல தமாஷ்.


sankaranarayanan
அக் 19, 2024 08:52

உலக அமைதிக்கான இந்த ஆண்டு அடுத்த நோபல் பரிசு நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கே கொடுக்கலாம் என்று தீர்மங்கள் கொண்டுவாருங்கள் அவர்தான் அதற்கு தகுதி வாய்ந்த உத்தமர்


Duruvesan
அக் 19, 2024 08:14

மஹா எலெக்ஷன் துருப்பு சீட்டு, இண்டி கூட்டணி evm மூலம் பிஜேபி வெற்றின்னு குற்ற சாட்டு


Duruvesan
அக் 19, 2024 08:12

இண்டியா கூட்டணி கண்ணீர்


Kasimani Baskaran
அக் 19, 2024 08:09

அருமை.


skv srinivasankrishnaveni
அக் 19, 2024 08:08

மடிந்து போன உயிர்களெல்லாம் meendumvarumaaaaaaaaaaaa


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை