உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு பொய்: இஸ்ரேல் பிரதமர்

காசாவில் இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு பொய்: இஸ்ரேல் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐக்கிய நாடுகள்: '' காசாவில் இனப்படுகொலை செய்வதாக இஸ்ரேல் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய். அதற்கு ஆதாரமில்லை. காசாவில் உணவுப்பொருட்களை ஹமாஸ் அமைப்பினர் திருடுகின்றனர்,'' என ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகு பேசியதாவது: ஒட்டுமொத்த உலகின் அமைதிக்கும் ஈரான் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏமனில் உள்ள ஹவுதிக்கள் பாதிபேர் கொல்லப்பட்டனர். காசாவில் ஹமாசின் யாஹ்யா சின்வரும், லெபனானில் ஹசன் நசரல்லாவும் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஆசாத் ஆட்சி வீழ்த்தப்பட்டு உள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துபவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். ஈரானின் மூத்த ராணுவ கமாண்டர்கள், அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதனை செய்தால் நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். இல்லைஎன்றால் இஸ்ரேல் உங்களை வேட்டையாடும்.பொது வெளியில் எங்களுக்கு கண்டனம் தெரிவித்தவர்கள், தனிப்பட்ட முறையில் எங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதலை நிறுத்தும் அளவுக்கு உளவுத்துறை உள்ளதாக பாராட்டுகின்றனர்.அமெரிக்காவும், ஈரானும் பொதுவான அச்சுறுத்தலை சந்திப்பதை மற்ற தலைவர்களை விட டிரம்ப் புரிந்து கொண்டுள்ளார். அமெரிக்கர்களை பிணைக்கைதிகளாக பிடித்து மிரட்டும் போது, அதற்கான என்ன விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்பதை அவர் காட்டினார்.இனப்படுகொலை என தவறான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அப்பாவி மக்கள், பெண்கள் மீது வேண்டுமென்றே தாக்குவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. காசா மக்களுக்கு இஸ்ரேல் உணவு வழங்கம்போது, அந்நாட்டு மக்களை பட்டினியில் ஆழ்த்துவதாக எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. காசா மக்களுக்கு போதிய உணவு இல்லை என்றால் அதற்கு ஹமாஸ் அமைப்பினர் உணவுப்பொருட்களை திருடுவதே காரணம். அதனை பதுக்கி, விற்பனை செய்து போர் செய்வதற்கான செலவுக்கு பயன்படுத்துகின்றனர். பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சில நாட்டு தலைவர்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளனர். அக்.,7 ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் செய்த அட்டூழியத்தை பார்த்த பிறகும் அவர்கள் அதனைச் செய்துள்ளனர். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மாட்டோம். இவ்வாறு நெதன்யாகு பேசினார்.

வெளிநடப்பு

ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் பிரதமர் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல நாட்டு பிரதிநிதிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் சார்பி்ல மூத்த அதிகாரிகளுக்கு பதில் கீழ்மட்ட அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Bharathi
செப் 27, 2025 20:01

Weldone Israel ...please advise india how to react when such terrorism happen in our soil.


Venugopal S
செப் 27, 2025 13:04

2002ல் குஜராத் மதக் கலவரத்தில் இனப்படுகொலை செய்ததாக பாஜக கூடத்தான் ஒத்துக் கொள்ளவில்லை!


Anand
செப் 27, 2025 11:00

//பொது வெளியில் எங்களுக்கு கண்டனம் தெரிவித்தவர்கள், தனிப்பட்ட முறையில் எங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்// இதுதான் மேற்கத்திய நாடுகளின் உண்மை முகம். இவர்களை நம்பி சிக்கி சின்னாபின்னமாவது என்னவோ மூர்க்கம் தான். இதில் பாகிஸ்தான் / பங்களாதேஷ் போன்ற மூர்க்கங்களும் அடங்கும்.


veeramani
செப் 27, 2025 09:32

தீவிரவாதம், தீவிரவாதிகள் அனைத்தும் ஒழிக்கப்படவேண்டும் இஸ்ரயேலின் அப்பாவி மக்களை ஹமாஸ் கடத்தும்போது எவரோ வையை திறக்கவில்லை. இஸ்ரயேலின் பிரதமர் நெதன்யாஹு அவரின் மக்களை மீட்டுவிடுக்க ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார். இதுவும் சரிதான்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 27, 2025 07:42

தனக்கு எதிரான தீவிரவாதத்தை ஒழித்து தன்னைக் காத்துக்கொள்வது ஒரு நாட்டின் தனியுரிமை ...... இந்தியா தீவிரவாதத்துக்கு எதிரான தனது பேடித்தன்மையை 2014 முதல் கைவிட்டது .......


Kasimani Baskaran
செப் 27, 2025 06:51

தீவிரவாதம் என்ற கோழைத்தனம் இருக்கும் வரை இது போன்ற பக்க விளைவுகள் வரத்தான் செய்யும். துவண்டு விட்டால் அமைத்து வர வாய்ப்பே இல்லை. ஒரு காலத்தில் யூதர்களை, இந்துக்களை விரட்டி அடித்தார்கள். இனி காலம் மாறும். தீவிரவாதத்தின் ஆணி வேர் மதம். அதை சத்ரபதி சிவாஜி புரிந்து கொண்டான். அதே போல இந்துக்களும் புரிந்துகொள்ள வேண்டும் - இல்லை என்றால் பலர் நமக்கு தர்மத்தை போதிப்பார்கள்.


Ramesh Sargam
செப் 27, 2025 01:53

மற்ற நாடுகள் இஸ்ரேல் பிரதமர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர். அவரோ எல்லாம் பொய் என்று மறுக்கிறார். யார் பேச்சை நம்புவது? உண்மையை எப்படி கண்டறிவது?


Field Marshal
செப் 27, 2025 07:34

கொஞ்ச நாள் காஜாபகுதியில் தங்கி உண்மை நிலைமை கண்டறிந்து எழுதுங்களேன்


RAJ
செப் 26, 2025 23:53

தல ... நீ விளையாடு.. கைய வச்ச வேர் அறுக்கனும்..


தாமரை மலர்கிறது
செப் 26, 2025 22:51

இஸ்ரேல் கொடுத்த உணவுப்பொருள்களை ஹமாஸ் அமைப்பினர் திருடி கொள்கிறார்கள். இதனால் மக்களுக்கு ஏதும் கிடைப்பதில்லை. ஹமாஸை அழித்து ஒழித்தபின்னர், காசா சிறந்த அமைதி பூங்காவாக திகழும். காசா மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுப்பதற்காகவும் அவர்களுக்கு ஜனநாயகம் அளிப்பதற்காகவும் இஸ்ரேல் தனித்து இந்த போரை நடத்துகிறது. அதற்கு உதவி செய்வது உலக நாடுகளின் கடமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை