உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உல்லாச கப்பலில் அமேசான் நிறுவனருக்கு திருமணம்; யார் யாருக்கு அழைப்பு தெரியுமா?

உல்லாச கப்பலில் அமேசான் நிறுவனருக்கு திருமணம்; யார் யாருக்கு அழைப்பு தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் மற்றும் அவரது வருங்கால மனைவி லாரன் சான்செஸின் திருமணம், ஜூன் 24 முதல் 26ம் தேதி வரை உல்லாச கப்பலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அமேசான் நிறுவனரும், உலகப் பணக்காரர்களின் ஒருவருமான ஜெப் பீசோஸ், 61, அவரது அவரது காதலி லாரன் சான்ச்சேஸ், 55, திருமண விழா ஜூன் 26 முதல் 29 தேதி வரை நடைபெற உள்ளது.திருமணம், இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் ஒரு சொகுசு கப்பலில் நடத்த திட்டமிட்டபட்டுள்ளது. திருமணத்துக்கு வி.ஐ.பி.,க்கள் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர், கிரிஸ் ஜென்னர், கிம் கர்தஷியான், இவா லாங்கோரியா உள்ளிட்ட பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.அதேநேரத்தில் பிரபலங்களின் வருகை குடிமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எந்த இடையூறும் இருக்காது என வெனிஸ் நகர மேயர் லூய்கி ப்ருக்னாரோ கூறியுள்ளார். யார் இந்த ஜெப் பீசோஸ்?* அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பீசோஸ், 61, உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் இருப்பவர்.* பீசோஸ், ஏற்கனவே மெக்கன்ஸி ஸகாட் உடன் திருமணமாகி 25 ஆண்டுகள் குடும்பம் நடத்தியவர். நான்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.* அமேசான் மட்டுமின்றி, விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் புளூ ஆர்ஜின், அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட், ஐ.எம்.டி.பி., என்பன உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.* 2019ம் ஆண்டிலேயே லாரனுடன் காதலில் இருப்பதாக ஜெப் பீசோஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மு செந்தமிழன்
மார் 31, 2025 09:20

நம்ம ஊர்ல 60 வயசுல பேரன் பேத்தி எடுத்து அதுகளுக்கு கழுவிக்கிட்டு இருக்கிறாங்க அமெரிக்காவுல கல்யாணம் பண்ணி அனுபவிக்கிறான்


Sridhar
மார் 30, 2025 18:48

இந்த ஆளு ஏற்கனவே செஞ்ச விவாஹரத்துல மனைவிக்கு 32 பில்லியன் டாலர் நஷ்ட ஈடா கொடுக்கவேண்டிவந்திச்சு. கல்யாணம்ங்கறது அந்த அளவுக்கு டேஞ்சர்ன்னு தெரிஞ்சதுக்குப்பறமும் இவரு இன்னொரு பொம்பளைய கல்யாணம் செய்ய முடிவெடுத்திருப்பது ரொம்பவே ஆச்சரியமா இருக்கு இந்த அளவுக்கு பணம் கிடைக்குனா எந்த பொம்பளைக்கும் அந்த ஆளைவிட அதுவே முக்கியமா இருக்கும். கூடிய விரைவில் இவர் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில் இன்னொரு பாதி காணாமப்போகப்போகுது


Premanathan Sambandam
மார் 30, 2025 21:37

கஷ்டப்பட்டு சம்பாதித்தாக இருந்தால் இப்படி அள்ளிக் கொடுக்க மாட்டார்


Ray
மார் 31, 2025 07:36

அமேசான் மட்டுமின்றி, விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் புளூ ஆர்ஜின், அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட், ஐ.எம்.டி.பி., என்பன உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒரு விரலைக் கூட அசைக்காமலே ஜூபூம்பான்னு மந்திரத்தில் வந்தது.


Sampath Kumar
மார் 30, 2025 17:37

கடல் மேல கப்பலில் கல்யாணமா ? என்ன சொல்லவர்றாங்கன்னா நீர் மேல தாய் செய்தல் கல்யாணம் நிலைக்காதாம்... டிடானிக் கப்பல் போல சிதறிடுமாம் பாத்துக்க அப்பு...


Kulandai kannan
மார் 30, 2025 17:27

டோப்பா வாங்க அட்வைஸ் பெறுவதற்காகவாவது ஒருவரை அழைக்கலாம்.


sankaranarayanan
மார் 30, 2025 17:26

திராவிட மாடல் அரசின் முதல்வர் திராவிட செம்மல் திராவிட அப்பா இவருக்கும் புள்ளையாண்டானுக்கும் அழைப்பு வருமா ? கப்பலில் உல்லாசமாக சென்று வரலாமே...


Ray
மார் 30, 2025 17:17

நம்ம பிரதமர் கலந்துக்கறாரா இல்லையான்னு சொல்லக் கூடாதா? சஸ்பென்ஸா விட்டா எப்படி? அதுவேற யோகி புல்டோசரை எடுத்துட போராரு.


Oviya Vijay
மார் 30, 2025 16:40

பல்லு இருக்குறவன்... Sorry... பணம் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை