உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா எங்கள் எதிரி; எண்ணெய் நிறுவனங்கள் மீதான தடைக்கு ரஷ்யா பதிலடி

அமெரிக்கா எங்கள் எதிரி; எண்ணெய் நிறுவனங்கள் மீதான தடைக்கு ரஷ்யா பதிலடி

மாஸ்கோ: அமெரிக்கா எங்கள் எதிரி. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது.உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் நான்காவது ஆண்டை எட்டிப் பிடிக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போது ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவிற்கு எதிராகத் தடைகளை டிரம்ப் அறிவிப்பது இதுவே முதல் முறை.இது தொடர்பாக, ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான மோதலுக்கான மூல காரணங்களைத் தீர்க்க வேண்டும். அமெரிக்கா எங்கள் எதிரி. சமாதானத்தை உருவாக்குபவர் டிரம்ப். இப்போது ரஷ்யாவுடனான போர்ப் பாதையில் முழுமையாக இறங்கிவிட்டார். அமெரிக்கா ஏமாற்றப்பட்ட ஐரோப்பாவுடன் தன்னை கூட்டாளியாக இணைத்துக் கொண்டுள்ளது. உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்யாவை கட்டுப்படுத்த அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் எதிர்மறையானவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

PathyUSA
அக் 23, 2025 20:43

my friend Please remember more than 20 lac INDIAN people are happily living WITH FAMILY in USA


Nanchilguru
அக் 23, 2025 20:14

தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும் போர் நின்று விடும்


R Mohan
அக் 23, 2025 19:30

எல்லா நாடுகளும் டிரம்பிற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்


KOVAIKARAN
அக் 23, 2025 19:23

, உக்ரைன் NATO கூட்டமைப்பில் சேரமாட்டோம் என்று எழுதி ஒப்புக்கொண்டாலே இந்தப் போர் நின்றுவிடும். மேலும் உக்ரைனும், ரஷ்யாவும் மூன்றாம் நாடு தலையீடின்றி இருவரும் சந்தித்து பேசசுவார்த்தை நடத்தி இந்த போரை நிறுத்த வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடந்தாலொழிய அந்த இரு நாடுகளிலும் அமைதி நிலவ பல வருடங்கள் ஆகலாம்.


Field Marshal
அக் 23, 2025 19:20

ஏதாவது ஒரு அமெரிக்க மாகாணத்தில் திராவிட ஆட்சி அமைந்தால் போதும்


ராமகிருஷ்ணன்
அக் 23, 2025 17:44

வரியை எதிர் கொள்ளும் எல்லா நாடுகளும் இணைந்து அமெரிக்கா மீது பொருளாதார தடைகளை போட வேண்டும்


Subburamu K
அக் 23, 2025 17:10

USA is uniting three major powers Russia China and India. Trump 's tariff war back fires USA economy and world trade. USA lost it's credibility and d major countries as it's enemies France Germany and other European countries will realise their mistakes soon


Ravi
அக் 23, 2025 17:10

ரஷ்யா போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும். வேறு வழி இல்லை


Senthoora
அக் 23, 2025 17:41

அப்படி செய்தால் அடுத்து அமெரிக்காவால் இந்தியாவுக்கும் அச்சுறுத்தல், நிலவரணம் அறிந்து கருத்து போடுங்க.


Shekar
அக் 23, 2025 18:10

ரஷ்யாவை ஆள்வது, மன்மோகன் சிங்கோ, ராகுலோ அல்ல.


Ganesh
அக் 23, 2025 19:55

ஏங்க எல்லா சைடும் அமெரிக்கா அண்ட் நேட்டோ சுத்து போட்டுச்சுன்னா ரஷ்யா வை அழித்து விடுவார்கள்... ரஷ்யா செய்வது சரியே...உக்ரைன் சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்


Indhuindian
அக் 23, 2025 16:10

He must be credited with redifining and codifying the work of American President -Viz only Tariff regulation. Probably he thinks it over in the night and depending on which side gets up in morning, he decides the tariff by putting his finger on the world map as people do for Ramar Chakram and Sita Chakram in the Paambu Panchaangam


Anand
அக் 23, 2025 16:02

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு பலத்த அடி கொடுத்து அதன் கொட்டத்தை அடக்க முடியுமா?


Senthoora
அக் 23, 2025 17:48

உலக நாடுகள் ஆதரவு இருந்தால், இரத்தமே சிந்தாமல் அமெரிக்காவை அடக்கலாம்.


சமீபத்திய செய்தி