உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் சிறந்த ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கை; அமெரிக்கா புகழாரம்

இந்தியாவுடன் சிறந்த ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கை; அமெரிக்கா புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்கர்களை குறிவைத்து சைபர் குற்றங்களை நிகழ்த்தி வந்த கும்பலை ஒழித்ததற்காக சிபிஐக்கு அமெரிக்கா அரசு நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு முதல் அமெரிக்கர்களை குறி வைத்து ரூ.350 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த கும்பலை, அமெரிக்காவின் எப்பிஐ உடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் சிபிஐ முறியடித்தது.அமிர்தசரஸில் உள்ள குளோபல் டவரில் 'டிஜிகாப்ஸ் தி ப்யூச்சர் ஆப் டிஜிட்டல்' என்ற பெயரில் மோசடி கும்பல் ஒன்று போலி கால் சென்டரை நடத்தி பணம் பறித்து வந்தது. இதனை கண்டுபிடித்து சிபிஐ சீல் வைத்தது. எப்பிஐ உடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில், அந்தக் கும்பலைச் சேர்ந்த ஜிகர் அகமது, யஷ் குரானா, மற்றும் இந்தர் ஜீத் சிங் பாலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரூ.54 லட்சம் ரொக்கம், 8 செல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், 'இந்தியா - அமெரிக்காவின் ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கையின் ஒரு மிகப்பெரிய வாரம்' என்று குறிப்பிட்டது.மேலும், 'பகிரப்பட்ட தகவல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம், மோசடிகளைத் தடுப்பதற்கும், நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிபிஐ மற்றும் எப்பிஐ இணைந்து ஒன்றாக பணியாற்றி வருகின்றன. சிஐபியின் ஒருங்கிணைந்த பணி மற்றும் ஆதரவுக்கு நன்றி,' என்றும் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ManiMurugan Murugan
ஆக 29, 2025 00:35

ManiMurugan Murugan. இது தான் இந்தியா அமெரிக்கா வரி என்றப் பெயரில் இந்தியாவை மோசடி செய்தாலும் மிரட்டினாலும் இன்னா செய் தாரே ஒருத்தர் அவர் நானன்ன நன்னயம் செய்துவிடல்


M Ramachandran
ஆக 28, 2025 12:34

நீ எப்படி பட்ட அயயோகிய சிகாமணி என்பது உலகிற்கு தெரியும் .எஙகளுக்கு உன்னை விட முன் யோசனை உண்டு. உன்னையும் ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு நிற்க வைத்து கேள்வி கேட் போம்.


V RAMASWAMY
ஆக 28, 2025 09:25

பாரதம் தங்கள் கடமையை சமூக நல்லெண்ணத்தின் அடிப்படையில் சீராகத்தான் செய்து கொண்டிருக்கிறது. எதிரி நாடான பாகிஸ்தான் மக்களுக்கே வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்து அந்நாட்டு மக்களை காப்பாற்றியிருக்கிறது. நீங்கள் புகழவும் வேண்டாம், இகழவும் வேண்டாம். உங்கள் அடிப்படை நோக்கம். உலகரியச் செய்துவிட்டிர்கள், இனி மற்ற எல்லா நாடுகளும் உங்களை நண்பராகவோ எதிரியாகவோ பார்க்கமாட்டார்கள், ஆனால் ஜாக்கிரதையாக இருப்பார்கள், விஷ ஜந்துக்களிடம் இருப்பதுபோல்.


venkatarengan.
ஆக 28, 2025 08:15

நன்றியை உறுதி செய்யும் வகையில் இந்தியாவிற்கு மேலும் 50 சதவிகித வரி உயர்வு மற்றும் பாக்கிஸ்தானுக்கு zero tariff, மற்றும் ஒரு ட்ரில்லியன் டாலர் உதவி அப்படி தானே மிஸ்டர் ட்ரம்ஸ் அவர்களே நடிகர் விஜய் பாணியில் பேசவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை