வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஆச்சி ஜூன் லாக்ஹார்ட்டின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் ..
A talented actress. May her soul rest in peace.
லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில், தாய் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த ஜூன் லாக்ஹார்ட், தன் 100வது வயதில் காலமானார். நம் தமிழ் சினிமாவில் தாய் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்டவர், ஆச்சி என அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகை மனோரமா. இவரைப்போன்று, அமெரிக்காவின் தொலைக்காட்சி தொடர்களில் பாசமிகு தாயாக நடி த்து பலராலும் அறியப்பட்ட ஜூன் லாக்ஹார்ட், 100, வயது மூப்பின் காரணமாக கலிபோர்னி யாவில் உள்ள தன் இல்லத்தில் காலமானார். ஜூன் லாக்ஹார்ட்டின் தாய், தந்தை இருவரும் பிரபலமான நடிகர்கள். கடந்த 1938ம் ஆண்டு வெளியான 'எ கிறிஸ்மஸ் கரோல்' என்ற திரைப்படத்தில் தன் பெற்றோருடன் இணைந்து நடித்தார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், டிவி தொடர்களில் நீண்ட காலம் தாய் கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆச்சி ஜூன் லாக்ஹார்ட்டின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் ..
A talented actress. May her soul rest in peace.