உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆனார் இந்தியர்

அமெரிக்க நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆனார் இந்தியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் ‛ வீ வொர்க் ' என்ற நிறுவனத்தின் பங்குகளை அதிகளவில் வாங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனந்த் யார்டி என்பவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த நிறுவனம் திவால் நிலை கோரி விண்ணப்பித்த நிலையில் ஆனந்த் யார்டி தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வீவொர்க் நிறுவனத்தை 2010ம் ஆண்டு, ஆடம் நியூமேன் மற்றும் மிகல் மெக்கெல்வே ஆகியோரால் துவக்கப்பட்டது. வெவ்வேறு நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அலுவலக இடம், உபகரணங்கள், வரவேற்பாளர், பாதுகாவலர் சேவைகள் என ஒரு சேர அனைத்தையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் ஐடியாவை பயன்படுத்தி இந்த நிறுவனம் துவங்கப்பட்டது.துவங்கப்பட்ட போது இந்த நிறுவனத்தின் மதிப்பு 47 பில்லியன் டாலர் ஆக இருந்தது. ஆனால், கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் இதுவும் ஒன்று. கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த இந்த நிறுவனம் 2023 நவ., மாதம் திவால் நிலைக்கு விண்ணப்பித்தது. 2024 ல் ஏப்., மாதம் இந்த நிறுவனத்தின் மதிப்பு 750 மில்லியன் டாலர் ஆக சரிந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, தற்போது அதிகமாக வாங்கி ஆனந்த் யார்டி, அதன் சி.இ.ஓ., ஆக மாறி உள்ளார்.

யார் இவர்

1.இந்தியாவில் பிறந்த இவர், 1968 ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.2.1963 ல் ஜேஇஇ தேர்வில் முதலிடத்தை பிடித்த இவர், டில்லி ஐஐடியில் பிடெக் முடித்தார். அப்போது தங்கப்பதக்கம் வென்றார்.3.அமெரிக்காவின் பெர்க்லேயில் உள்ள கலிபோர்னியா பல்கலையில் அறிவியல் படிப்பில் முதுகலை படிப்பை முடித்தார்.4.அமெரிக்காவில், பாரோக்ஸ் கார்பரேசன் என்ற நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றினார்.5.1984 ல், யார்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்தை துவக்கி, தற்போது வரை அதன் தலைவராக உள்ளார். அவரது தலைமையில் சிறப்பாக செயல்படும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வருகிறது இந்த நிறுவனம். 6.அமெரிக்காவில் பல அமைப்புகளின் விருதுகளையும் வாங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rangarajan
ஜூன் 02, 2024 05:29

பாராட்டுக்கள். மிக மிக மகிழ்ச்சி.


Rangarajan
ஜூன் 02, 2024 05:28

வாழ்க வாழ்க வளர்க வாழ்த்துகள்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 02, 2024 01:08

பிரைன் ட்ரெயின் ....


RAJ
ஜூன் 01, 2024 20:06

அப்புஉஉஉ.. 68 வயசுலயும் அம்மாவ... அம்மானுதானே கூப்பிட முடியும்.. உங்க ஊர்ல எப்புஉஉஉடி?


Ramesh Sargam
ஜூன் 01, 2024 18:49

இந்தியர்களிடம் சாமர்த்தியம், படிப்பறிவு எல்லாம் நிறைய இருக்கிறது. ஆனால், அதை பிறந்த தாய் நாட்டுக்கு உபயோகப்படுத்தாமல், வெளிநாடுகளுக்கு பயன்படுத்துவது மிக மிக வேதனை அளிக்கிறது.


Vijayakumar Srinivasan
ஜூன் 02, 2024 01:01

உண்மை தான்சார்.ஆனால் இங்கே உபயோகபடுத்ததகுந்தக் சூழ்நிலை இல்லையே..முட்டுகட்டை.போடநிறைபேர் உள்ளார்களே.


Suresh R
ஜூன் 02, 2024 01:56

Crooked Indians are ruling the country where merit is not valued. Otherwise how politicians children are becoming big businessmen?


J.V. Iyer
ஜூன் 01, 2024 17:11

பாராட்டுக்கள்.


அப்புசாமி
ஜூன் 01, 2024 17:07

அவர் 1968 லேயே அங்கே போயாச்சு. இன்னும் இந்தியர்னு சொன்னா சிரிப்பாங்க.


rama adhavan
ஜூன் 01, 2024 21:46

இக்கரைக்கு அக்கரை பச்சை. அவ்வளவு தான்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ