வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உலகச்செய்திகள யூடியூப் மூலம் தமிழில் தொடர்ந்து வீடியோ காட்சி மூலம் தெரிவிக்கவும் e
Congratulations Jhanhavi ..
வாழ்த்துக்கள்.
நியூயார்க்: ஆந்திராவை சேர்ந்த தங்கெடி ஜானவி 23, 2029ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்கிறார். ஜானவி விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை நாசா அறிவித்துள்ளது.ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பலக்கொள்ளு கிராமத்தை சேர்ந்தவர் தங்கெடி ஜானவி. இவரது பெற்றோர் குவைத்தில் வசிக்கின்றனர்.பஞ்சாப் லவ்லி பல்கலையில், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவில் பட்டம் பெற்ற ஜானவி, நாசாவின் சர்வதேச விண்வெளி பயணத் திட்டத்தில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.இதன் மூலம் டைட்டன் ஆர்பிட்டல் போர்ட் ஸ்பேஸ் ஸ்டேஷன் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், வரும் 2029ம் ஆண்டு விண்வெளிக்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் படிக்கும்போதே, நாசாவின் விண்வெளி செயலி சவால் மற்றும் இஸ்ரோ உலக விண்வெளி வார இளம் சாதனையாளர் விருதுகளை பெற்றுள்ளார்.நாசா விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஜானவிக்கு, ஆந்திரா மாநில அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகச்செய்திகள யூடியூப் மூலம் தமிழில் தொடர்ந்து வீடியோ காட்சி மூலம் தெரிவிக்கவும் e
Congratulations Jhanhavi ..
வாழ்த்துக்கள்.