உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் கும்பல் தாக்கி மேலும் ஒரு ஹிந்து படுகொலை

வங்கதேசத்தில் கும்பல் தாக்கி மேலும் ஒரு ஹிந்து படுகொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த மற்றொருவரை, கும்பல் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல், ஹிந்துக்களின் தொழில்களை குறிவைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ், 27, முஸ்லிம் மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்தார் என வதந்தி பரப்பப்பட்டது. இதை நம்பி ஒரு கும்பல் அவரை கொடூரமாக கொலை செய்தது.வங்கதேசத்தில், அடுத்தாண்டு பிப்., 12ல் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்நாட்டில் தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர்இழந்தார். இதையடுத்து, அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது.மேலும், ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள வெளிநாடுவாழ் ஹிந்துக்களான ஜெயந்தி சங்கா மற்றும் பாபு ஷுகுஷில் ஆகியோரது வீடுகளை மர்ம நபர்கள், நேற்று முன்தினம் தீ வைத்து கொளுத்தினர். இது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் நேற்று இரவு (டிசம்பர் 24) நள்ளிரவில் வங்கதேசத்தின் ராஜ்பரி மாவட்டத்தில் மற்றொரு ஹிந்து மதத்தை சேர்ந்தவரை கும்பல் ஒன்று அடித்து கொன்றதாக தற்போது அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.போலீசார் கூறியதாவது:ராஜ்பாரி மாவட்டத்தின் பாங்ஷா உபசிலாவில் உள்ள ஹொசைந்தங்கா சந்தையில் இந்தத் தாக்குதல் நடந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர் அம்ரித் மண்டல் 29, என தெரியவந்துள்ளது.அம்ரித் மண்டல் ஒரு உள்ளூர் குழுவின் தலைவராக இருந்தவர். அவர் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த கும்பல் அவரைத் தாக்கியதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Veluvenkatesh
டிச 25, 2025 20:54

ஐயோ இது மட்டும் தெரிஞ்சுது....து??? அப்புறம் டாஸ்மாக் வீரன்??? படையை அனுப்பி அங்குள்ள பெரும்பான்மையான இனத்தவர்களை ஒழிச்சு கட்டிடுவாரே??? ஆண்டவரே காப்பாத்துங்க


montelukast sodium
டிச 25, 2025 20:47

வாங்கதேசம் என்றால் திறக்கும வாய் இலங்கை இந்துக்களுக்கு ஏன் திறக்கவில்லை


தத்வமசி
டிச 25, 2025 21:09

காசாவுக்கு கொதித்த அனைத்து புண்ணாக்குகளும் இப்போது நவதுவாரத்தை மூடிக் கொண்டு இருப்பதன் காரணம் என்ன ?


montelukast sodium
டிச 25, 2025 20:46

இலங்கையில் 1 லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டபோது நடுநிலை, ஒரு நிலை என யாரும் கொந்தளிக்கவில்லை


Nachiar
டிச 25, 2025 21:22

இலங்கையில் கொல்லப்பட்ட அனைவரும் இந்துக்கள் இல்லை. . இலங்கை தமிழர்களில் யாழ்ப்பாண தமிழர்களின் பேரினவாதம் பிற தமிழர்களை நசுக்கியது. யாழ்ப்பாண பேரின வாதமும் சின்ஹல பேரினவாதமும் முட்டிக் கொண்டதால் அப்பாவி தமிழர்களுடன் அப்பாவி சிஙகளவர்களும் இஸ்லாமியரும் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். பங்களாதேஷில் இந்துக்கள் கொல்லப்படுவது அநியாயம் ஏற்றுக்கொள்ள முடியாதது.


ManiK
டிச 25, 2025 20:38

திமுக காதுகளுக்கு இதுபோன்ற செய்திகள் தேன் பாய்ந்த மாதிரி இருக்கும். இந்த விஷமத்துக்கும் மைனாரிட்டி ராகத்தில் நம் ஹிந்துக்களுக்கு தான் வசைபாட்டு கிடைக்கும்.


Rameshmoorthy
டிச 25, 2025 20:34

Those who spoken for Gaza is truly shameless


Kumar Kumzi
டிச 25, 2025 19:42

காதுகள் செவுடாகிவிடும்


தமிழ் நிலன்
டிச 25, 2025 19:37

ஔரங்கசீப் காலம் இப்படி தான் இருக்கிறது


Anand
டிச 25, 2025 19:23

இதற்கு நமது முதல்வர் என்ன சொல்லப்போகிறார்?


Santhakumar Srinivasalu
டிச 25, 2025 19:53

வங்க தேசத்திற்கு இவரை அனுப்பலாமா?


SANKAR
டிச 25, 2025 20:12

what PM is going to say?!


vivek
டிச 25, 2025 20:53

sankar can you go there to solve


vivek
டிச 25, 2025 20:54

sankar is pakistani..so he can go there


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை