உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா வழியில் அர்ஜென்டினா உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகல்

அமெரிக்கா வழியில் அர்ஜென்டினா உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவைத் தொடர்ந்து அர்ஜென்டினாவும் வெளியேறி உள்ளது.அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், கோவிட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை உலக சுகாதார அமைப்பு சரியாக கையாளவில்லை எனக்குற்றம்சாட்டி அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.இதற்கு அடுத்தபடியாக டிரம்ப்பின் நெருங்கி நண்பரான ஜேவியர் மைலி ஆட்சி செய்யும் அர்ஜென்டினாவும் அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து உள்ளது. கோவிட் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களை உலக சுகாதார அமைப்பு சரியாக கையாளவில்லை. இதனால், ஆழ்ந்த பிரச்னைகள் உருவானதாக மைலி குற்றம்சாட்டி உள்ளார். மேலும், கோவிட் காரணமாக முந்தைய ஆட்சி காலத்தில் நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், உலக சுகாதார அமைப்பு சுதந்திரமாக செயல்படாமல் மற்ற நாடுகளின் அரசியலுக்கு உட்பட்டது எனவும் கூறியுள்ளார்.இது தொடர்பாக அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பில் அர்ஜென்டினா பங்கேற்பதில் இருந்து விலகிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை துவக்கும்படி வெளியுறவு அமைச்சருக்கு அதிபர் உத்தரவிட்டு உள்ளார் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

raja
பிப் 06, 2025 08:12

கொரானா வந்து அநியாயமா செத்தவங்க குடும்பத்துக்கு ஒன்னும் இல்லை ஆனா கள்ள சாராயம் குடிச்ச செத்தவன் குடும்பத்துக்கு பத்து லட்சம்.. கேடுகெட்ட மாடல் அரசு...


raja
பிப் 06, 2025 06:25

இந்தியாவும் இது பொள் வெளியேற வேண்டும்.. பல லட்சம் இந்தியர்களின் பலியான உயிருக்கு எந்த பதிலும் இல்லை கொரானாவை பரப்பிய சீனாவின் மேல் எந்த நடவடிக்கையும்... இல்லை...


கோமாளி
பிப் 06, 2025 01:34

புது அமைப்பு ஒன்றை தொடங்கி மீண்டும் இதே வேலையை தான் செய்யப் போகிறார்கள். எதற்கு இந்த தேவையில்லாத ஆணி??


ஆனந்த்
பிப் 05, 2025 22:39

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


ஷாலினி
பிப் 05, 2025 22:37

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ


சமீபத்திய செய்தி