உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு; 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு; 7 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் இன்று (நவ., 03) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள், கட்டடங்கள் குலுங்கியதை கண்டு, சாலையில் தஞ்சம் அடைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3i5ubf8m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். மேலும்,150 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதுவரை 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். பல்ஹா மாகாணத்தின் கவர்னர் செய்தி தொடர்பாளர் ஹாஜி ஜைதின் கூறியதாவது: இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நிதி மற்றும் மனித இழப்புகளைச் சந்தித்துள்ளோம், என்றார்.வடக்கு ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட மூன்று நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வசிக்கும் முன்னாள் பள்ளி டிச்சர் ரஹிமா கூறியதாவது: நிலநடுக்கம் ஏற்பட்ட போது, தனது குழந்தைகள் படிக்கட்டுகளில் இருந்து கத்திக் கீழே ஓடினர்.என் வாழ்நாளில் இவ்வளவு வலுவான நிலநடுக்கத்தை நான் அனுபவித்ததில்லை. ஜன்னல்கள் சேதம் அடைந்தது. எனது வீடு கான்கிரீட்டால் ஆனது. இதனால் லேசாக சேதம் அடைந்துள்ளது. நகரின் புறநகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் மண்ணால் ஆன வீடுகள் அனைத்தும் தரைமட்டம் ஆனது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 2,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
நவ 03, 2025 11:09

ஒவ்வரு நாடும், இனமும் தான் செய்கிற இன அழிப்பு, பெண்களை கொடுமை படுத்துவது, படுகொலைகள் செய்து ரத்தம் பூமியில் விழுவது ஆகியவை இது போன்ற அழிவுகளை உண்டாக்கும். இது இறைவனின் நீதி. ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து, சீக்கியர்களை இன அழைப்புகளை செய்து அவர்களது வாழ்விடங்களை, வழிபட்டு தலங்களை பிடுங்கி, பெண்களை கொடுமை செய்து ஏழ்மையை உண்டாக்கி உள்ள கூட்டம் அதன் பாவங்களை அனுபவிப்பதில் இருந்து தப்ப முடியாது.


Rahim
நவ 03, 2025 09:58

இயற்கை பேரிடரில் இருந்து உலக மக்கள் அனைவரையும் காப்பாற்ற இறைவனை வேண்டுவோம்...


Ramesh Sargam
நவ 03, 2025 09:18

இப்ப நம்ம தமிழக முதல்வர் அங்கு சிக்கியுள்ள தமிழர்களை காப்பாற்றவேண்டும் என்று நமது பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவார் பாருங்கள். மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது. அதுபோல, நடவடிக்கை எடுப்பது பிரதமராக இருந்தாலும், ஸ்டிக்கர் ஓட்டுவது தமிழக முதல்வர்.


Rahim
நவ 03, 2025 10:00

உன் மனதை முதலில் சுத்தம் செய் நீயெல்லாம் ஒரு மனுஷனா ???


Ramesh Sargam
நவ 03, 2025 09:01

பாகிஸ்தான் அரசு ரொம்ப சந்தோஷப்படும் மனித நேயம் இல்லாதவர்கள் அவர்கள். மிருகங்களைவிட மோசமானவர்கள் அவர்கள். இந்தியா கட்டாயம் ஆப்கான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யும்.


SUBBU,MADURAI
நவ 03, 2025 08:15

உடனடியாக நம் பாரதம் அந்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை