உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல்!

வங்கதேச விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; சிலர் காயமடைந்தனர்வங்கதேசத்தில் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் விமான படையின் தளம் உள்ளது. அங்கு பணியாற்றும் விமானப்படை வீரர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் சில காலமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று உள்ளூர் மக்கள் கல்வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது, அவர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். மோதல் முற்றிய நிலையில், ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t1x9z8i7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தாக்குதலில் 30 வயதான ஷிஹாப் கபீர் என்பவர் கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காக்ஸ் பஜார் துணை கமிஷனர் முகமது சலாவுதீன், தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். விமானப்படை தளத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.'விமானப்படை தளம் மீதான தாக்குதல் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என விமானப்படை தளம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2025 20:45

காட்டுமிராண்டிகள் பத்தி சொல்றதுக்கென்ன இருக்கு ?? அங்கே சோத்துக்கில்லாத நிலைமை ....


jayvee
பிப் 24, 2025 16:12

USAIDS பாகிஸ்தானுக்கு கொடுத்த பணம் இன்னும் பங்களாதேஷில் செலவாகிக்கொண்டுள்ளது .. பங்களாதேஷ் மீண்டும் பாக்கிஸ்தான் வசம் கொஞ்சமும் மீதி உள்ள பெருமபாலான பகுதி இந்திய வசமும் செல்லும் வாய்ப்பு உள்ளது


Petchi Muthu
பிப் 24, 2025 15:41

கடும் நடவடிக்கை தேவை


KavikumarRam
பிப் 24, 2025 15:22

மண்ணு குதிரை யூனுஸை நம்பி பங்களாதேஷ் மக்கள் நாசமாகி போய்க்கொண்டு இருக்கிறார்கள். அந்த பங்களாதேஷ் தத்தி கடைசில வேறு ஏதாவது நாட்டில் அடைக்கலம் வாங்கி போய் செட்டில் ஆகிருவாரு. அவரை நம்பி கேனத்தனமான கொந்தளிச்சவனுங்க எல்லாம் சோத்துக்கு சிங்கி அடிக்கப்போறானுங்க.


Petchi Muthu
பிப் 24, 2025 15:16

வரும் நாட்களில் தங்கம் விலை சரியும்


புதிய வீடியோ