வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்.... பெஞ்சமின் நெத்தன்யாஹூ....
ஜெருசலேம்: 'ஈரான் அதிகமான குண்டுகளை தயாரித்து வருகிறது.ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளோம் ' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்தார். இஸ்ரேல்- ஈரான் இடையே நடந்து வரும் போர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூகவலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இது ஒன்றும் பெரிய சீக்ரெட் இல்லை. எங்கள் தாக்குதலில் ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்தில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவர்கள் அணு ஆயுதங்களை உருவாக்க முயன்று வரும் நிலையில், அதை எங்கள் தாக்குதலால் நிறுத்த முடியவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h5exo0yl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஈரான் அதிகமான குண்டுகளை தயாரித்து வருகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளோம். ஈரான் எங்களை அழிப்பதற்காக அணு குண்டுகளை உருவாக்கி கையிருப்பு வைத்துள்ளது. ஈரான் வசம் நீண்ட தூரச் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ள நிலையில், அடுத்த கட்டமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தொடந்து தாக்குதல் நடத்தினால், மேற்காசியாவில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்.... பெஞ்சமின் நெத்தன்யாஹூ....