உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் எச்சரிக்கை: மேலும் ஒரு ஹிஸ்புல்லா கமாண்டர் பலி

தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் எச்சரிக்கை: மேலும் ஒரு ஹிஸ்புல்லா கமாண்டர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட்:லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர் இப்ராஹிம் அஹில் கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒரு கமாண்டர் கொல்லப்பட்டதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது. இது போன்ற தாக்குதல் தொடரும் என, இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.மேற்காசிய நாடான லெபனானில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள், காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

உயிர்ச்சேதம்

இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் லெபனான் பயங்கரவாதிகளின் 3,000 பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில், 37 பேர் பலியாகினர்; 3,000 பேர் காயமடைந்தனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது 140 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இதில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில், ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிகளவு வசிக்கும் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், இந்த அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் அஹில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், 31 பேர் உயிரிழந்தனர்.மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினரின் 100 ராக்கெட் ஏவுதளங்கள், 1,000 ராக்கெட் பேரல்கள், ஆயுதக் கிடங்கு ஆகியவையும் தகர்க்கப்பட்டன. இதை இஸ்ரேல் ராணுவம் நேற்று உறுதி செய்தது.இது தொடர்பான அறிக்கையில், 'உளவுத் துறை தகவலின்படி பெய்ரூட்டில் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் எலைட் ராட்வான் படையின் கமாண்டர் இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார்.'இவருடன், இந்தப் படையில் உள்ள மேலும் சிலரும் இறந்துள்ளனர். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தயாராகி வந்தனர். 'இதைத் தடுக்க அவர்களின் ஏவுகணை தளங்கள், ஆயுதக் கிடங்குகளை முழுமையாக அழித்துஉள்ளோம். 'இஸ்ரேல் மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை இனிவரும் காலங்களில் தொடரும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டனம்

இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு முக்கிய கமாண்டர் அகமது வகாபி என்பவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்கிடையே, பேஜர் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரிவின் தலைவர் வோல்கர் டர்க், “இது சர்வதேச மனித உரிமை மீறலாகும். இந்த தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.யார் இந்த இப்ராஹிம் அஹில்?ஹிஸ்புல்லா அமைப்பில், கடந்த 1980ல் சேர்ந்தவர் இப்ராஹிம் அஹில். லெபனானில் அதே ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பிய மக்கள் பிணைக்கைதிகளாக கடத்தப்பட்டனர். அதில் இப்ராஹிம் அஹிலுக்கு தொடர்பு இருந்த தாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1983-ம் ஆண்டு லெபனானில் உள்ள அமெரிக்க துாதரகம் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில், இப்ராஹிம் அஹிலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இதனால், அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா, அவரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு, 70 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sridhar
செப் 22, 2024 11:20

இஸ்ரேலை பாத்தா பெருமையா இருக்கு, ஏன் பொறாமையா கூட இருக்கு ஹ்ம்ம்... என்னைக்கு இந்தியர்களுக்கு இவ்வளவு அறிவும் வீரமும் சாதூரியமும் வருமோ அதுக்கெல்லாம் தேசப்பற்று ரொம்பவே முக்கியம். அது இந்தியாவில் ராணுவவீரர்களை தவிர வேற யார்கிட்டேயும் பெரிய அளவில் இல்லைங்கறதே உண்மை. ஒருவேளை ராவுல் வின்சி மற்றும் திராவிடியா பசங்க சொல்ற மாதிரி இந்தியா ஒரு தேசம் இல்லையோ? இல்ல, இந்த இரண்டு டைப்பையும் மொத்தமா ஒழிச்சிட்டா, தேசம் ஒன்றுபட்டு முன்னேறுமோ?


mei
செப் 22, 2024 09:43

இஸ்ரேல் கண்ணு நீ பூந்து வெளையாடுடா??


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 22, 2024 08:47

இந்தியா இதே போன்று பாக்கி ஐ. எஸ். ஐ. கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 10:03

சாரி ..... அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க ......


raja
செப் 22, 2024 08:11

தீவிரவாதி பயங்கரவாதி ன்னு சொல்லிகிட்டு ஒருத்தன் கூட இந்த உலகில் நடமாட விட கூடாது....உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களை கருவருக்க வேண்டும்...


தாமரை மலர்கிறது
செப் 22, 2024 06:21

பயங்கரவாதிகளை கொன்று குவித்து வரும் இஸ்ரேலுக்கு இந்தியா ஒரு லட்சம் கோடி உடனடியாக நிதி உதவி கொடுத்து உதவவேண்டும். தேவையானபோது உதவிசெய்பவனே சிறந்த நண்பன். தொடர்ந்து இஸ்ரேல் தன்னந்தனியாக போராடி வருகிறது. பயங்கரவாதிகள் குறைவது ஒட்டுமொத்த உலகிற்கே நல்லது என்ற அடிப்படையில் முதல் கட்ட உதவியாக ஒரு லட்சம் கோடி இஸ்ரேலுக்கு கொடுத்து உதவுவது நல்லது.


Kasimani Baskaran
செப் 22, 2024 06:14

அதெப்படி தீவிரவாதிகள் இனப்பெருக்கம் செய்யவிடாமல் அந்த இடத்தில் குண்டு வைத்து வெடிக்கச்செய்யலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருப்பது ஒரு வகை தீவிரவாத ஆதரவு நிலைப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். தீவிரவாத அமைப்பில் இந்தியா உறுப்பினராக இருந்து ஒரு பயனும் இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்கு பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடையாதாம் - ஆனால் பழைய பிரிட்டனுக்கு இடம் உண்டாம். இந்தியா ஐநாவில் இருந்து வெளியேறுவதே நல்லது.


SUBBU,MADURAI
செப் 22, 2024 04:05

Just 3 gms each RDX was used to blast pagers. Now imagine how Dawood Ibrahim, Abdul Latif, and others brought 3000 kg RDX to India for 1993 Mumbai blasts!


SUBBU,MADURAI
செப் 22, 2024 04:02

Hezbollah intelligence documents have been allegedly discovered regarding the damage from the pager explosions. 879 Hezbollah Terrorists died. 291 Senior Commanders died. 509 Blinded. 1,735 injured in reproductive organs. 613 Permanent function damage.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை