வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதை படித்துவிட்டு, தமிழக முதல்வர் நாமும் பல நாடுகளுக்கு செல்கிறோம் முதலீடு வாரிக்கொண்டு வரலாம் என்று. ஆனால் ஒரு நயாபைசா தேற மாட்டேங்குதே என்று வருத்தப்படுவார்.
கான்பரா: ஆஸ்திரேலியாவின், அடிலெய்டில் இந்தியா - ஆஸ்திரேலியா வர்த்தக கூட்டமைப்பு தலைவர்களான பியூஷ் கோயல் மற்றும் ஆஸி., அமைச்சர் டான்பெர்ரல் ஆலோசனை நடத்தினர். உலக வர்த்தக கூட்டுறவு, இருநாட்டு வர்த்தகம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருநாடுகள் இடையே 2030ம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரு நாட்டு வர்த்தக உறவு தொடர்பாக அமைப்பு உருவாக்கப்பட்டது முதல் ஒன்றரை ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளது. இது போன்ற உறவு இன்னும் உயரும். கங்காருவும், புலியும் இணைந்துள்ளது. இதனை யாரும் பிரிக்க முடியாது. மேலும் ஆஸி., பல்கலை., இந்திய மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கு 5 மில்லியன் டாலர் ஒதுக்கவும், கலாசாரம், சமூக உறவு மேம்படுத்த 5 மில்லியன் டாலர் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.இது குறித்து, மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பணி மற்றும் விடுமுறை விசா, 2024ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் செயல்படும். இது மக்கள் பயணம் செய்வதை எளிதாக்கும் மற்றும் மக்களிடையேயான உறவை அதிகரிக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.
இதை படித்துவிட்டு, தமிழக முதல்வர் நாமும் பல நாடுகளுக்கு செல்கிறோம் முதலீடு வாரிக்கொண்டு வரலாம் என்று. ஆனால் ஒரு நயாபைசா தேற மாட்டேங்குதே என்று வருத்தப்படுவார்.