உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய மாணவர்களை நிராகரிக்கும் ஆஸி., பல்கலைகள்!

இந்திய மாணவர்களை நிராகரிக்கும் ஆஸி., பல்கலைகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாக்களை தவறாக பயன்படுத்துவதாக கூறி, இந்தியாவின் 5 மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்புகளை படிக்க அதிகம் விரும்புகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் படிப்பதற்கு ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆஸி., வரும் மாணவர்களுக்கு விசா வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், விசா பெற்று வருவோர், அதை தவறான வழிகளில் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து மாணவர் விசா வழங்குவதற்கான நடைமுறைகளை ஆஸ்திரேலிய அரசு கடுமையாக்கி வருகிறது. மாணவர்களுக்கான விசா எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

5 மாநிலங்கள் என்ன?

அந்த வகையில், குஜராத், பீஹார், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநில மாணவர்கள் ஆஸி., வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன.டிசம்பர் 2022ம் ஆண்டு முதல் டிசம்பர் 2023ம் ஆண்டு வரை இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களில் 48 சதவீதம் மட்டுமே ஏற்கப்பட்டன.

நிராகரிப்பு

தற்போது விசா கோரும் இந்திய மாணவர் விண்ணப்பங்களில் 20 சதவீதம் வரை ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்கப் படுகின்றன. இதில், குறிப்பிட்ட மாநில மாணவர்களின் விண்ணப்பங்களை ஏற்பதே இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் 2022ல் சேர்ந்த பஞ்சாப், ஹரியானா, குஜராத் மாணவர்களில் பெரும்பகுதியினர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்க்க கூடாது என அந்நாட்டு அரசு 2023ம் ஆண்டிலேயே அறிவுறுத்தல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Sakthi
ஏப் 14, 2025 21:50

இங்கு வடக்கன் என்று வன்மத்தை கக்கும் திரவிட சம்பத் குமார் அரூர் ரே போன்ற திரவிடியா அடிமைகளுக்கு தமிழ்நாட்டில் வந்து வேலை செய்யும் வடக்கன் எண்ணிக்கையை விட டாஸ்மாக் வாசலில் காலையில் வரிசையில். நிற்கும் குடிகார தமிழர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்று இடிதுரைகனும்


தஞ்சை மன்னர்
ஏப் 14, 2025 20:46

ஹவாலா தொழில் செய்வதற்கு உதவி செயகின்றனர் என்று அங்குள்ள FIU மூலம் தகவல் வந்த வண்ணம் இருக்கின்றது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 14, 2025 22:29

ஹவாலா மூர்க்கத்தின் பரம்பரைத் தொழிலுடா .....


Mecca Shivan
ஏப் 14, 2025 20:45

இந்த ஐந்து மாநிலங்களும் பேராசை பிடித்த நபர்கள் அதிகமுள்ளனர் ..குறிப்பாக ஹரியானா மற்றும் புஞ்சாபிகள் ஆஸ்திரேலியாவில் அதிகம் உதைபட காரணம் அவர்களின் இரவுநேர போதை அட்டகாசங்கள் ..


S. Venugopal
ஏப் 14, 2025 19:51

ஆஸ்திரேலியாவில் கல்லுரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அதிகமாக பேராசிரியர்களாக இருப்பவர்கள் மேற்கூறிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?


velan Iyengaar, Sydney
ஏப் 14, 2025 22:12

gummidipoondi கூட தாண்டாத Venugopalக்கு ஆஸ்ட்ரேலியா பத்தி ரொம்பவே தெரியும் போல...?


S. Venugopal
ஏப் 15, 2025 07:52

ஆஸ்திரேலியா செல்ல கும்முடிப்பூண்டி தாண்ட வேண்டாம் இந்துமகா கடலைத் தாண்டிப்போகணும். தாங்கள் சிட்னிக்கு போனது திரு பாண்டியராஜன் திரு எஸ் வி சேகர் ஒரு சினிமாவில் துபாய் போனதுபோலவா? ஒவ்வொரு காலேஜ் வெப்சைட் ஐ பார்த்தால் போதும் விபரம் அறியலாம்


Narasimhan
ஏப் 14, 2025 18:54

இந்திய மாநிலங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள். வட இந்திய மாநிலங்கள் என்று சொல்லுங்கள். ஆஸ்திரேலியா, நியூசிலண்ட், கனடா, ஐரோப்பா நாடுகளில் எழுத படிக்க கூட தெரியாத பஞ்சாபிகள் மற்றும் குஜராத்திகள் மட்டும்தான் இது போல் பித்தலாட்டம் செய்து குடியுரிமை பெறுகிறார்கள்.


S.Martin Manoj
ஏப் 14, 2025 18:30

வெளி நாட்டுக்காரன் இந்த மாநிலங்களைப்பற்றி நல்லவே தெரிஞ்சு வச்சிருக்கான், பிராடு பயலுங்க ஜாஸ்தி.


Lakshumanan Aruna
ஏப் 14, 2025 17:29

தமிழ் தமிழன்னாலே பிடிக்காதே!? தொடர்ந்து அனுக்கமாக செய்திபடிப்பவர்களுக்கு தெரியும்


GSR
ஏப் 14, 2025 17:08

பத்து ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் எம் ஜி ஆர் பல்கலை கழக எம் பி பி எஸ் படித்தவர்களை நிராகரித்தனர். கிரேஸ் மார்க் அளவிற்கு அதிகமாக வாரி வழங்கி பாஸ் செய்து விட்டது கண்டுபிடிக்கப்பட்டது


Keshavan.J
ஏப் 14, 2025 16:56

குஜராத், பீஹார், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் மாணவர்கள் நிராகரிப்பு. ஓகே அப்போ அவர்கள் மற்ற மாநிலத்தில் பாஸ்போர்ட் எடுத்தால் ஒற்றுக்கொள்வார்களா. ஏனென்றால் எல்லா பயபுள்ளைக மற்ற இடத்தில எடுப்பார்கள். யூனிவர்சிட்டி சேர்டிபிகேட் வைத்து நிராகரிக்கணும்.


अप्पावी
ஏப் 14, 2025 16:38

இங்கேயிருந்து படிக்கப் போறேன்னுட்டு, பாதியில் படிப்பை நிறுத்திட்டு அங்கேயே டீக்கடை, சமுசா, பக்கோடா யாவாரம் ஆரம்பிச்சுடறாங்களாம். கேக்கறதுக்கு நல்லாவா இருக்கு?