வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அமெரிக்கா போக ஐ டி காரங்க படாதபாடு பட வேண்டியிருக்கு ..... தல என்னடான்னா ஜம்முன்னு போயி இறங்கிட்டாப்படி ....
மஹாராஷ்டிர அரசியலில் இந்த கொலைச் சம்பவம் முக்கியப் பங்காற்றும் என்பது மட்டும் புரிகிறது ....
லக்னோ: மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மஹாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த அக்., 12ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு சிறையில் உள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலுக்கு தொடர்பிருப்பதும், 3 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9dp5vxsd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான ஷிவ் குமார் தலைமறைவானார். ஷிவ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்து, தப்பியோட உதவிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, மும்பை போலீசாரும், உ.பி., சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து உத்தரபிரதேசத்தின் பஹரைச்சில் வைத்து ஷிவ் குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சொல்லியே, பாபா சித்திக்கை கொலை செய்ததாக ஷிவ் குமார், கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.அன்மோல் பிஷ்னோய் சமூக வலைதளமான ஸ்னாப் சாட்டின் மூலம் குற்றவாளிகளை தொடர்பு கொண்டு பேசி, உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய நண்பராக பார்க்கப்படும் சுபம் லோங்கரின் உதவியால், அன்மோல் பிஷ்னோயை ஷிவ்குமார் பலமுறை தொடர்பு கொண்டு பேசியதும் தெரிய வந்துள்ளது.கலிபோர்னியாவில் கைது
இதனை வைத்து அன்மோல் பிஷ்னோயை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதுங்கியிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவனை நாடு கடத்தி கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா போக ஐ டி காரங்க படாதபாடு பட வேண்டியிருக்கு ..... தல என்னடான்னா ஜம்முன்னு போயி இறங்கிட்டாப்படி ....
மஹாராஷ்டிர அரசியலில் இந்த கொலைச் சம்பவம் முக்கியப் பங்காற்றும் என்பது மட்டும் புரிகிறது ....