உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் ராணுவத்தை புரட்டி அடிக்கும் பலுச் விடுதலை ராணுவம்!

பாகிஸ்தான் ராணுவத்தை புரட்டி அடிக்கும் பலுச் விடுதலை ராணுவம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கராச்சி: தனி நாடு கோரி போராடி வரும் பலுச் விடுதலை ராணுவத்தினர், (பி.எல்.ஏ.,), பாகிஸ்தான் ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.பாகிஸ்தானில் அதிக நிலப்பரப்பு கொண்ட மாநிலமாக இருப்பது பலுசிஸ்தான். இங்கு எண்ணெய் வளம் அதிகம்.இங்கு பலுாச் இன மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் மீது ஓரவஞ்சனையாக நடந்து கொள்ளும் பாகிஸ்தான் மத்திய அரசு, பலுாச் இன மக்களை அடக்கி, அச்சுறுத்தி ஆண்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=56n8jt4u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், பலுசிஸ்தான் என்ற பெயரில் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு போராளிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில் பலுச் விடுதலை ராணுவம் என்ற போராளிக்குழு முக்கியமானது. ராணுவம் போன்ற அனைத்து வசதிகளுடன் செயல்படும் இந்த அமைப்பு, அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் மீதும், அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.கடந்த ஒரு மாதம் முன்னதாக, ரயிலை கடத்திய இந்த அமைப்பை சேர்ந்த போராளிகள், போலீசார், ராணுவ வீரர்கள் என பலரை சுட்டுக்கொன்றனர். தற்போது இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் கவனம் செலுத்தி வரும் நிலையில், பலுச் விடுதலை ராணுவம் மீண்டும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது.நேற்று இந்த அமைப்பை சேர்ந்த போராளிகள், கலாட் மாவட்டத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினர். குவெட்டா - கராச்சி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அங்கு அமைந்துள்ள, வங்கிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.ஆயுதம் தாங்கிய போராளிகள், தேசிய நெடுஞ்சாலையில் வந்த அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். வாகனங்களில் வந்த மக்களிடம், 'சுதந்திரத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும். இதை உங்கள் பாகிஸ்தான் அரசிடம் சொல்லுங்கள்' என்று கூறினர்.இதேபோல, குவெட்டா பகுதியில் அமைந்துள்ள கடானி சிறையை தாக்கிய பலுச் விடுதலை ராணுவத்தினர், அங்கிருந்த 10 போராளிகளை விடுவித்தனர். போலீசார் 5 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்றனர்.பலுச் விடுதலை ராணுவத்துக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும், உலகின் பல்வேறு நாடுகளில் பலுச் இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நெதர்லாந்தில் பலுச் விடுதலை இயக்கம் சார்பில், தங்கள் இன மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அத்துமீறல் தொடர்பான போட்டோ கண்காட்சி நடந்தது. தங்கள் இனம் மீது நடத்தப்படும் தாக்குதலை சர்வதேச சமுதாயம் கண்டிக்க வேண்டும் என்று, கண்காட்சியை நடத்திய பலுச் இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.பலுச் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் மக்கள் சித்ரவதைக்கு ஆளாவதாகவும், லாக்கப்பில் வைத்து கொல்லப்படுவதாகவும், அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு தனி நாடு ஒன்றே தீர்வு என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Balakrishnan karuppannan
மே 06, 2025 21:27

ஒருவேளை பாகிஸ்தான் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீரை நாம் மீட்டாலும் அங்குள்ள இஸ்லாமிய மக்களை நாம் தத்தெடுத்துக்கொள்ளக் கூடாது... இங்குள்ள கூலி பான்ஸ் களையே நம்மால் சமாளிக்க முடியல... இதில் அவர்களும் வந்து விட்டால்..அம்பேத்கரும் ராமசாமி நாயக்கரும் சரியாக கணித்துள்ளனர்.


Thirumalaimuthu L
மே 06, 2025 14:04

எந்த காரணம் கொண்டும் பலூச்தான், போக மக்களை இந்தியாவுடன் சேர்க்கவே கூடாது. அவர்கள் எண்ணிக்கையில் மிகுதியானால் இந்தியாவில் அமைதி என்பது கேள்விக்குறி?


ராமகிருஷ்ணன்
மே 06, 2025 11:19

பாகிஸ்தானின் எண்ணம் போல அவர்களின் வாழ்க்கை இருக்கும். இந்தியாவின் மேல் உள்ள பொறாமை, பகைமை அவர்களை அழித்து விடும்


நிக்கோல்தாம்சன்
மே 06, 2025 04:34

மதவாதிகளை உலகத்தில் இருந்தே அனுப்பும் நாள் eppodhu?


Iniyan
மே 05, 2025 22:21

என்றும் அமைதி மார்கதினரை நம்ப முடியாது. உதாரணம் வங்கதேசம்.


Karthik
மே 05, 2025 21:41

பலுச் விவகாரத்தில் இந்தியா, வங்கதேசத்துக்கு உதவியதையும் அவர்களின் நன்றி கடனையும் நினைவு கூறுவது இந்நேரத்தில் அவசியம். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற சொலவடை இங்கு பொருத்தமாக இருக்கும்.


Tamilselvan Radhakrishnan
மே 06, 2025 02:24

மிக சிறப்பான கருத்து


Rajpal
மே 07, 2025 20:18

கார்த்திக்கின் கருத்து,கோடியில் ஒன்று. இவர்கள் எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் மாறவோ திருந்தவோ மாட்டார்கள்.


Ramesh Sargam
மே 05, 2025 21:08

இந்த தாக்குதல் போதாது என்று பாகிஸ்தானில் பூகம்பமாம். அடுத்து இந்திய ராணுவம் தாக்குதல். ஒழிந்தது பாக்கிஸ்தான்.


Barakat Ali
மே 05, 2025 20:35

அவங்களுக்கு இந்தியா உதவினாலும் தப்பில்லை .......


Srinivasan Krishnamoorthy
மே 05, 2025 20:44

india is helping in the backend


Murugiah M
மே 05, 2025 21:10

அவங்களுக்கு உதவி செய்து, தனி நாடு வாங்கி கொடுத்த பின், அவன் பாகிஸ்தான் கூட சேர்ந்து இந்தியாவை எதிற்பான்..வங்க தேசம் மாதிரி, பாலஸ்தீனம் மாதிரி...இந்த நன்றி கெட்ட நாய்களை ஒருத்தனுக்கு ஒருத்தன் முட்டிக்கிட்டு சாவுங்கடா ன்னு விட்டுர்றது தான் சரி..இரண்டு பேருக்கும் முடிந்தால் ஆயுதம் கொடுத்து ரெண்டு பேரும் சீக்கிரம் ஒழிய உதவி செய்யலாம்..


சமீபத்திய செய்தி