உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்து துறவிக்கு நீதிமன்றம் ஜாமின் மறுப்பு

வங்கதேசத்தில் ஹிந்து துறவிக்கு நீதிமன்றம் ஜாமின் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்டா: வங்க தேசத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இஸ்கான் துறவிக்கு ஜாமின் வழங்க, வங்கதேச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.நமது அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாகவே, ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை அரங்கேறி வருகிறது. இந்த அராஜக செயல்களுக்கு எதிராக அமைதியான முறையில், இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி போராடி வந்தார். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில், நவம்பர் 25ம் தேதி கிருஷ்ணதாஸை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இஸ்கான் துறவியின் கைதிற்கு, எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேசத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.இதற்கிடையே, ஜாமின் கோரி, இஸ்கான் துறவி சார்பில், வங்கதேச நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஜன.,02) விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் சின்மயி கிருஷ்ண தாஸ் சார்பில் ஆஜராக எந்த வழக்கறிஞரும் நுழைய முடியாத நிலையில் விசாரணை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. அப்போது, இஸ்கான் துறவிக்கு ஜாமின் வழங்க, வங்கதேச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து வங்கதேசத்தின் முன்னாள் துணை அட்டர்னி அபுர்பா குமார் கூறியதாவது: நாங்கள் நீதிமன்றத்தில் எங்கள் வாதங்களை முன்வைத்தோம். அரசுத் தரப்பில் ஜாமின் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணதாஸை ஜாமினில் வெளியே விட நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஹிந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் துறவிக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

அப்பாவி
ஜன 03, 2025 05:33

உள்ளேதான் சேஃப். வெளியே உட்டா போட்டுத் தள்ளிடுவாங்க. மூர்க்கம் பொல்லாதது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 02, 2025 21:49

மூக்குக்கு கீழே வட்டமா ஒண்ணு இருக்கு இல்ல? என்னது, வாயா? ஆமா, அதை மூடிக்கிட்டு இருந்தால் எல்லோருக்கும் நல்லது. இவர்களை, வங்காளத்தில் போயி, " பகவத் கீதை பற்றி பேசு, கீதை புக் குடு " என்று ஸ்ரீகிருஷ்ணபகவான் சொன்னாரா??


C.SRIRAM
ஜன 02, 2025 22:57

உண்மையான பெயரில் கருத்து போடு முதலில் .


KRISHNAN R
ஜன 02, 2025 21:28

நன்றி இல்லா மக்கள்


Kanns
ஜன 02, 2025 21:24

Indiraji Did Blunder of Not Merging 25% PakBangla With India to Accommodate Hindu etc Minorities 1800CE year Esp Entire Baluch-Sindh-EastBengal Coast to LandLock Erstwhile Secceded Regions of India Islamic PakBangla by British-Congress Traitors, to Suffer incl Butcherings-Rapes etc by CorePakis& Balkanisation themselves. All Hues& Cries Wdve been Over within Few years


C.SRIRAM
ஜன 02, 2025 19:08

அந்த பங்களாதேஷ் வெளியுறவு ஆலோசகன் எங்கு போனான் அரிசிக்கு கெஞ்சும் போது ?. அவனை குறைந்த பட்சம் விரும்பத்தகாத நபராக அறிவித்து குறைந்த பட்சம் நிரந்தர இந்தியா விசா தடை விதிக்க வேண்டும். எவ்வாளவு கொடுத்தாலும் இந்த நாய் நாடு இப்படித்தான் இருக்கப்போகிறது . இந்தியா முழுதும் சட்டவிரோத பங்களாதேஷ் வந்தேறிகளை தீவிரமாக கண்டுபிடித்து நாடுகடத்த வேண்டும் . இது அவசியம் மற்றும் அவசரம் .


Svs Yaadum oore
ஜன 02, 2025 17:13

இங்கு தலைக்கு மேல் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது அயல்நாட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன என்று விடியல் திராவிடனுங்க கேள்வி ...அப்ப எதுக்கு விடியல் திராவிட எம் பி பாராளுமன்றத்தில் பேசுகையில்," பாலஸ்தீன மக்களை காப்பற்றுவதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐநா அமைப்பு மசோதா கொண்டு வந்தது. அப்போது இந்திய அதற்கு வாக்களிக்க வில்லை. எதற்காக இந்தியா அதில் வாக்கு அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினாராம் ??.....விடியல் எம் பி மத சார்பின்மையாக இந்த கேள்வியை ஏன் எழுப்பனும் ??.....பாலஸ்தீனத்தில் உடன் பிறப்புகள் வசிக்கிறார்களா ??.....


Svs Yaadum oore
ஜன 02, 2025 16:51

திருப்பூர் கோவை பல்லடம் சோமனூர் என்று இங்கெல்லாம் பங்காளதேஷிகள் ....தமிழக ஜவுளி துறையில் வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே எல்லையில் அதிகளவில் வங்கதேசதினர் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் இன்று தெரிவித்துள்ளார்....குறைவான கூலிக்கு ஆட்கள் கிடைப்பதால் தமிழக ஜவுளி துறை உரிமையாளர்களும் அவர்களை ஊக்குவித்து வருகின்றனராம் ...இவர்கள் இங்கு ஊடுருவ அனுமதிப்பது மற்றும் அவர்களுக்கு ஆதார் கார்டு ரேஷன் கார்டு கொடுத்து இங்கு அனுப்புவது விடியல் பங்காளிகளான மேற்கு வங்க மேடம் .....இதற்கு இங்குள்ள விடியல் பதில் என்ன?? ...


Svs Yaadum oore
ஜன 02, 2025 16:46

தமிழக ஜவுளி துறையில் வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே எல்லையில் அதிகளவில் வங்கதேசதினர் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் இன்று தெரிவித்துள்ளார்....குறைவான கூலிக்கு ஆட்கள் கிடைப்பதால் தமிழக ஜவுளி துறை உரிமையாளர்களும் அவர்களை ஊக்குவித்து வருகின்றன ராம் ....இங்கே வந்தவுடன் அவர்களுக்கு சமத்துவம் சகோதரத்துவம் சமூக நீதி மத சார்பின்மையாக இங்குள்ள விடியல் அரசு பங்களாதேஷிகளுக்கு ஆதார் கார்டு ரேஷன் கார்டு கொடுத்து சமூக நீதியை காப்பார்கள் ....ஆனால் வடக்கன் என்றால் மட்டும் விடியலுக்கு படிக்காதவன் ஹிந்திக்காரன் ....அதுதான் விடியலுக்கு மத சார்பின்மை ...


venugopal s
ஜன 02, 2025 16:41

இங்கு தலைக்கு மேல் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது அயல்நாட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன? அங்கு உள்ள ஹிந்துக்கள் என்ன இந்தியர்களா நாம் கவலைப்பட?


RAMAKRISHNAN NATESAN
ஜன 02, 2025 18:37

உங்க பழைய கருத்துக்கள் நினைவில் உள்ளனவா ??


N Sasikumar Yadhav
ஜன 02, 2025 20:16

திண்கிற பிரியாணிக்கு விசுவாசமாக வாலாட்டுகிறீர் இந்து பெயரில் மறைந்திருக்கிற மூர்க்கரே . இஸ்லாமிய பயங்கரவாதம் உலகின் அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது


HoneyBee
ஜன 02, 2025 16:23

ஆடிய ஆட்டம் ஒரு நாள் முடிவுக்கு வரும். அப்போ பங்களா கூட்டம் ரோட்டில் அடித்து கொண்டு சாகும். சீக்கிரம் நடக்கும்


புதிய வீடியோ