உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!

முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: ஷேக் முஜிபுர் ரஹ்மான் (முன்னாள் அதிபர்) படம் கொண்ட ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை வங்கதேச மத்திய வங்கி நிறுத்தியதால், அந்நாட்டில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரம் அடைந்தது. போராட்டம் கையை மீறி போனதை அடுத்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சம் புகுந்தார். முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8bfjomdt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாட்டில், ஹசீனாவின் எதிர்ப்பாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால், பழையனவற்றை மாற்றும் வேலையை தீவிரமாக செய்கின்றனர். அவற்றில் ஒன்றாக, ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.வங்கதேசத்தின் ரூபாய் நோட்டுகளில், முன்னாள் அதிபரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் இடம் பெற்றுள்ளது. அதை நீக்கி விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட புதிய அரசு முடிவு செய்துள்ளது.இதனால் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லாது என்று அறிவிக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் முஜிபுர் ரஹ்மான் படம் இடம்பெற்ற 15, ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இது குறித்து மத்திய வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜியாவுதீன் அகமது கூறியதாவது: புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. இது ரொம்ப கடினமான விஷயம்.பொதுமக்களின் துன்பத்தைப் போக்க அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை சந்தையில் புழக்கத்தில் விட வேண்டும். புதிய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு, பழைய ரூபாய் நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்பட வேண்டும். தேவைக்கு ஏற்ப வங்கதேச வங்கியால் புதிய நோட்டுகளை அச்சிட முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார். தற்போது புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி துவங்கி உள்ளது. பணி முடிந்த பின்னர் வங்கிகள் மூலம், பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

metturaan
ஏப் 30, 2025 10:10

முஜிபுர் அவர்களின் சிலைகள் உடைபட்டது நினைவுச்சின்னங்கள் அகற்றப்பட்டது இப்போது பணத்தில் உள்ள படமும் அகற்றப்படுகிறது..‌ அவர் பெற்றுக் கொடுத்த சுதந்திரம் அவருக்கு எதிராக திரும்புகிறது... என்ன ஒரு விஸ்வாசம் அந்த மக்களுக்கு.... கொடுமை


Sivagiri
ஏப் 29, 2025 19:27

அவிங்க , மற்ற நாடுகளோட நோட்டுகளை - கள்ளத்தனமான , நல்லா க்ளீயரா - வேகமா அடிச்சு - புழக்கத்துக்கு அனுப்புவாய்ங்க - ஆனா அவங்க நோட்டுகளை அடிக்க முடியல . . . கள்ள நோட்டு அடிச்சே பழகிட்டாய்ங்கல்ல . . .


Nandakumar Naidu.
ஏப் 29, 2025 14:51

பங்களாதேஷ் ஒசாமா பின் லேடன் படம் போடப்போறாங்களா.


Kumar Kumzi
ஏப் 29, 2025 14:38

காட்டுமிராண்டிகள் செத்தொழியட்டும்


Rajinikanth
ஏப் 29, 2025 14:32

ஏன்யா? உங்களுக்கு வாங்க தேசத்தோட ஒப்பிட்டு நாம அவங்களைவிட நல்ல இருக்கோம் என்று கூவ தான் ஆசையா?


V Venkatachalam
ஏப் 29, 2025 14:25

தொட்டதற்கெல்லாம் அடுத்த நாடு அடுத்த தேசம் நல்லா இருக்கு மோடி அரசு மோசமான அரசு ரூபாய் நோட்டுகள் மாற்ற ஏ டி எம் மில் நின்று நிறைய பேர் இறந்து விட்டார்கள். மோடி ராஜினாமா செய்யணும் ன்னு பொங்கிய உபீஸ் இப்ப யூனூஸ் ராஜினாமா செய்யணும்னு இங்கே ராகுல் தலைமையில் போராட்டம் நடத்துவார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 14:33

ஊ ஊ பீயி ஸ் ன் எஜமானர்கள் யார் ?? ஜிஹாதிகள்-காங்கிரஸ்-திமுக-சீனா-தேசவிரோத ஊடகங்கள் ஆகியோர் கொண்ட இணக்கக் கூட்டமைப்பு .....


தத்வமசி
ஏப் 29, 2025 20:36

எந்த நாட்டில் இருக்கிறாய் வெங்கடாசலம் என்கிற ........?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 14:14

இந்தியாவில் கள்ளநோட்டைப் புழக்கத்தில் விடும் மூர்க்கன்ஸ் அங்கே அதைச் செய்யலாமே ?? மாட்டானுங்க .....


தத்வமசி
ஏப் 29, 2025 14:12

தீவிரவாதத்தால் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள நாடுகளைக் கண்டும் எதுவும் கற்றுத் தெளியவில்லை. தீவிரவாதமும், மத உணர்வும் எந்த நாட்டையும் முன்னேற்றாது.


சமீபத்திய செய்தி