உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்துக்களால் தொடர் பதற்றம்: இந்திய தூதருக்கு வங்கதேச அரசு சம்மன்

ஹிந்துக்களால் தொடர் பதற்றம்: இந்திய தூதருக்கு வங்கதேச அரசு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து வங்கதேச இந்திய தூதருக்கு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது.வங்க தேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து வங்கதேசத்தில் உள்ள இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி. சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி தலைமையில் கடந்த மாதம் ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக அந்நாட்டு போலீசாரால் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார்.அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை கண்டித்து சின்மாய் கிருஷ்ண தாஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வன்முறையாக மாறியதால் வங்க தேசம் முழுதும் பதற்றம் நிலவுகிறது.இந்நிலையில் வங்கதேச நாட்டிற்கான இந்திய தூதர் பிரணாய் வர்மாவுக்கு சம்மன் அனுப்பி தனது கண்டனத்தை பதிவு செய்தது. இது தொடர்பாக வங்க தேசத்தில் இருந்து வெளிவரும் பி.எஸ்.எஸ். எனப்படும் பங்களாதேஷ் சங்க்பாத் சங்கஸ்தா என்ற செய்தி நிறுவனத்திற்கு வெளியுறவு அமைச்சக அலுவலக ஆலோசகர் தவூஹித் ஹூசைன் அளித்துள்ள பேட்டி,வங்கதேச வெளியுறவு அமைச்சக செயலர் ரியாஸ் ஹமீதுல்லா இந்திய ஹைகமிஷனர் பிரணாய் வர்மாவுக்கு சம்மன் இன்று (டிச..03) அனுப்பியுள்ளார். அதில் வங்கதேச ஹிந்துக்களால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அண்டை நாடான இந்தியாவின் நட்புறவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Madras Madra
டிச 04, 2024 12:39

பங்களாதேஷ் இனி மத சார்பற்று இருக்க வாய்ப்பே இல்லை அங்கிருக்கும் சிறுபான்மையினரை மத வெறியர்களிடம் இருந்து காப்பாற்ற இந்திய போர் தொடுக்க வேண்டும் மிச்சம் மீதி இருக்கும் வங்க மக்களுக்கு தனி நாடு ஏற்படுத்தி தர வேண்டும்


Sathyanarayanan Sathyasekaren
டிச 03, 2024 22:58

இந்திரா கான் போலி காந்தி , மற்றும் பங்களாதேஷ் ஹிந்துக்கள் செய்த மாபெரும் தவறு, பங்களாதேஷ் போரின்போது ஹிந்துக்கள் தனி நாடு வாங்கி இருக்கவேண்டும் அல்லது இந்தியாவுடன் இணைந்து இருக்கவேண்டும். இவ்வளவு நடந்தாலும் வங்காளம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் சொ..பு தூக்கும் மம்தா பேகத்திற்கும் கம்யூனிஸ்ட்க்கும் கான் காங்கிரஸ்க்கும் சொரணை இல்லாமல் வோட்டை போட்டு கொண்டு இருக்கின்றனர்.


Palanisamy T
டிச 04, 2024 02:21

குறைந்த பட்சம் இந்தியா புதிய வங்கதேச நாட்டை மதச் சார்பற்ற நாடாக அறிவிக்க கோரியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் புதிய வங்க தேச நாடு இந்தியாவின் நல்ல நட்பு நாடாக இருந்திருக்கும். அன்று இந்தியாவின் சிறும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை இழக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராகயில்லை . ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும். எல்லாம் அரசியல் சுயநலம்தான் .


Palanisamy T
டிச 03, 2024 22:38

1. இஸ்கோன் அமைப்பினர் கொடியை அவமதித்தார்களா, ஒருவேளை உண்மையாக கூட இருக்கலாம் . தவறு தான். இருந்தாலும் அந்த கொடியை உங்களுக்கு வாங்கி கொடுத்ததே இந்திய நாடு மட்டும்தான். மறந்துவிட வேண்டாம் . இல்லை யென்றால் இன்று உங்களுக்கு நாடுமில்லை வீடுமில்லை நீங்களும் இல்லை. சரிதானே 2. இனனொன்றையும் உங்களிடம் கேட்க வேண்டியுள்ளது .உங்கள் நாடு 1971 -.ல் உருவான போது அங்கு கணிசமான இந்துக்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று எத்தனை பேர்களென்று சொல்ல முடியுமா? எல்லோரையும் விரட்டி விட்டீர்களா, அல்லது ஒடிவிட்டார்களா? உங்களோடு யாரும் வாழமுடியாது, உண்மைதானே.


Barakat Ali
டிச 03, 2024 22:27

மோடி-ஷா ரெண்டுமே அம்மஞ்சல்லிக்கு ப்ரோஜனம் இல்ல ....


Thiagu
டிச 03, 2024 22:00

மோடி அடுத்த எலெக்ஷன் பிரச்சாரம் திட்டம் ரெடி பண்ணுவார் போல், மிக கேவலமான அரசு


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 03, 2024 21:47

மோடி ஷா கூட்டணி யூஸ்லஸ் ......


Sathyanarayanan Sathyasekaren
டிச 03, 2024 22:50

அப்பா அய்யா உடனே விமானம் மூலம் பங்களாதேஷ் செல்லவும்.


Ramesh Sargam
டிச 03, 2024 21:38

வங்க தேச அரசின் செயல்பாட்டின் பின்னால் வேறு ஒரு நாடு செயல்படுகிறது. அது அநேகமாக சீனா அல்லது பாகிஸ்தான், அல்லது இரு நாடுகளும் சேர்ந்து வங்கதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கிறதோ என்னவோ...? இந்தியா இந்த மூன்று நாடுகளிடமும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


Nagarajan D
டிச 03, 2024 21:19

இஸ்லாம் என்றுமே உண்டகத்திற்கு துரோகம் செய்யும் மதம்... அவனுங்க தேசமே பாரதத்தால் தான் உருவானது நன்றிகெட்ட துரோகிகள் ... எங்கே சென்றாலும் அந்த நாட்டிற்கு எதிராகவே கலகம்செய்து அவனுங்க வணுங்குறதை மற்றவனுங்களும் வணங்கவேண்டும் என அலையும் பிறவிகள்... பாரதத்தில் இருந்து பாகிஸ்தான் மதத்தின் பெயரால் பிரிந்த போதே அடித்து துரத்திருக்கவேண்டும்.....


Tetra
டிச 03, 2024 21:08

யப்பா உங்க நாத்த உறவு எங்களுக்கு வேண்டாம். எங்கள் நாடான கிழக்கு வங்காளத்தில் இருந்து ஹிந்துக்களுக்கு பகுதி கொடுத்து விட்டு பாக்கியை வைத்துக்கொண்டு எப்படியோ போங்க


Barakat Ali
டிச 03, 2024 20:57

குதிரை கீழே தள்ளியதோடல்லாமல் குழியும் பறித்ததாம் என்பார்கள் ..... அந்த கதையா இருக்கே ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை