உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்க தேச இடைக்கால அரசின் ஆலோசகர் இன்று (ஆக.08) பொறுப்பேற்பு

வங்க தேச இடைக்கால அரசின் ஆலோசகர் இன்று (ஆக.08) பொறுப்பேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் இன்று (ஆக.08) பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதையடுத்து வங்கதேச பார்லிமென்டை கலைப்பதாக அதிபர் முகமது ஷகாபுதீன் உத்தரவு பிறப்பித்தார். அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ராணுவ தளபதி, இடைக்கால அரசு அமைக்கும் முயற்சியை துவங்கியுள்ளார்.இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அரசில் ராணுவத்தினர் இடம்பெற கூடாது; எந்த கட்சியின் பிரதிநிதியும் இருக்கக் கூடாது; அரசியல் மற்றும் ராணுவத்தை சாராத பொதுமக்கள் பிரதிநிதிகள் மட்டுமே அரசில் பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதித்துள்ளது.இதையடுத்து 2006ல் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டுள்ளார். இன்று (ஆக. 08) இடைக்கால அரசின் ஆலோசகராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kulandai kannan
ஆக 08, 2024 07:16

அறிவியல் தவிர பிற துறைகளில் நோபல் பரிசு பெறுபவர்களை நம்ப முடியாது, நம்ம ஊர் ஆமார்த்தியா சென் உள்பட.


தத்வமசி
ஆக 07, 2024 19:53

இவரால் என்ன செய்து விட முடியும் ? இது மாணவர் போராட்டமாக தொடங்கி, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க, சீன, பாகிஸ்தான் ஆதரவு போராட்டமாக மாறி விட்டது. இவரது பெயர் நாறப் போகிறது. பதவி ஆசை யாரை விட்டது ? மாணவர்கள் சாதித்து விட்டதாக நினைக்கலாம். இந்தியாவிடம் நல்ல உறவு இல்லாமல் வங்கதேசம் வளரவே முடியாது. சீனா போன்ற தேசமாக இருந்திருந்தால் இப்போது வங்கதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும்.


Anand
ஆக 07, 2024 18:44

ஒரு நல்ல ஜென்மமாக இருந்து, இங்கு வந்துள்ள கள்ளக்குடியேறிகளை திரும்ப அழைத்துக்கொள்வார் என நம்புவோம், மேலும் அங்கு ஹிந்துக்களையும் அவர்களின் உடைமைகளையும் சூறையாடிய மூர்க்கங்களை வேரோடு அழித்து அந்த நாட்டை நல்வழிக்கு இட்டு செல்வார் என நம்புவோம்.


Anu Sekhar
ஆக 07, 2024 22:46

உங்களுக்கு ரொம்ப பேராசை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை