வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இங்கிருக்கும் மூர்க்க கள்ளக்குடியேறிகளை உதைத்து விரட்ட வேண்டும்
டாக்கா: கடந்த அக்.1 முதல் வங்கதேசத்தில் துர்கா பூஜைக்கு இடையூறாக இதுவரை 35 சம்பவங்கள் நடந்துள்ளன. 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சிறுபான்மை ஹந்துக்கள் சிலர் குறி வைத்து தாக்கப்படுவதாகவும் இது குறித்து இந்தியா தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.,சும் இதனை உறுதி செய்கிறது. இதற்கிடையில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் தொடர்பாக தவறான தகவலும் சமூகவலை தளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது. பெட்ரோல் குண்டு வீச்சு
இந்நிலையில் இன்று காலை டாகா அருகே ஒரு பஜார் பகுதியில் நவராத்திரி திருவிழா நடந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்து துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் சிலர் காயமுற்றனர். கடந்த அக் 1 முதல் இது வரை நவராத்திரி தொடர்பாக 35 அத்துமீறல்கள், இடையூறுகள் நடந்துள்ளன. 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிருக்கும் மூர்க்க கள்ளக்குடியேறிகளை உதைத்து விரட்ட வேண்டும்