உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா; இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்!

நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா; இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு பதியப்பட்டது.அவருக்கு எதிராக கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி கடந்த ஆண்டே துாதரகம் வாயிலாக மத்திய அரசிடம் அந்நாடு வலியுறுத்தியது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. ஷேக் ஹசீனா மட்டுமின்றி மேலும் 12 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இன்டர் போல் என்றால் என்ன?

'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K V Ramadoss
ஏப் 20, 2025 18:12

ஷேக் ஹசீனா குற்றவாளி அல்ல... அரசியல் தஞ்சம் அடைந்தவர். அவரை இன்டர்போல் ஒன்றும் செய்யமுடியாது..


Srinivasan Krishnamoorthy
ஏப் 20, 2025 19:36

Interpol can only act on terrorists like Khalistani and pakistani terrrorists. Sheikh Hasina does not fall into this category.


Srinivasan Krishnamoorthy
ஏப் 20, 2025 14:53

Mohd younus wants to show film before he is getting thrown out. Without US under trump backing nothing will work for Bangladesh. Mohd younus is the stooge of Binden/obama and the US deep state


Keshavan.J
ஏப் 20, 2025 14:53

If she file a case mercy petition in Delhi Session court it will all the way go up to Supreme court. By the time 20 years will finish and Bangladesh will get fed up.


RAJ
ஏப் 20, 2025 13:18

டைம் சரி இல்லை..


தஞ்சை மன்னர்
ஏப் 20, 2025 13:15

நாம முகுல் சாக்ஷி , மல்லையாவை தேடும் பொது அவர்கள் அவர்கள் நாட்டில் நடந்த பிரச்சினைக்கு தேடுகின்றனர்


ஆரூர் ரங்
ஏப் 20, 2025 13:48

போபால் விஷவாயு கசிவு முக்கிய குற்றவாளி ஆண்டர்சனுக்கு தனி அரசு விமான வசதி செய்து கொடுத்து தப்பவைத்தது மறக்குமா. தப்பவைத்த குற்றவாளி படுகொலை செய்யப்பட்டபோது இரக்கத்தை விட அதுதான் நினைவுக்கு வந்தது.


கல்யாணராமன் சு.
ஏப் 20, 2025 22:04

தஞ்சை மன்னருக்கு அந்த அளவுக்கு சரித்திரம் தெரியுமான்னு தெரியலை .... அந்த மாதிரி சின்ன செய்திகளையெல்லாம் போடமாட்டாங்க ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை