உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வேண்டாம் என்கிறது வங்கதேசம்

நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வேண்டாம் என்கிறது வங்கதேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச நீதிபதிகள் மற்றும் நீதித் துறை அதிகாரிகளுக்கு, இந்தியாவில் நடத்தப்படவிருந்த பயிற்சி திட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணவர் அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடும் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.இதையடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது.

ரத்து

புதிய ஆட்சி பதவியேற்றது முதல், அங்குள்ள கோவில்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன. இந்த சூழலில், வங்கதேசத்தில் உள்ள 50 மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு நம் நாட்டில் உள்ள மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியில், அடுத்த மாதம் 10ல் ஒருநாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான செலவை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.இந்நிலையில், இந்த பயிற்சி ரத்து செய்யப்படுவதாக வங்கதேச சட்ட அமைச்சக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதற்கான காரணம் குறித்து அவர்கள் எதுவும் தெளிவுப்படுத்தவில்லை.

தீவிரம்

வங்கதேச உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்தே, இந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு 'டெய்லி ஸ்டார்' நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது முதல் இந்திய - வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், நீதிபதிகள் பயிற்சி ரத்து செய்யப்பட்டிருப்பது அதை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

veeramani
ஜன 09, 2025 09:55

நன்றி மறந்த பங்கடேஷிகளுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி .. பங்களாதேஷிகளுக்கு இனிமேல் எதுவும் ஏற்றுமதி செய்யவேண்டாம்


canchi ravi
ஜன 06, 2025 14:09

வங்கதேசத்திற்கு பாகிஸ்தானும் அமெரிக்காவும் சரியாய் நீதிப்பாடம் கற்பிக்கும் . இந்தியா எதற்கு.? இங்கே அடியெடுத்து வைக்காதீர்கள்.


Padmasridharan
ஜன 06, 2025 10:52

இவர்கள் மதத்தைதான் நம்புவார்களே தவிர, மனிதர்களை அல்ல. ஆனால் சொல்வதோ "அல்லாஹ் தான் எல்லா மக்களையும் படைத்தார்" என்று அந்த அல்லாஹ் படைத்த மக்களை வேறு மாதிரி பார்ப்பார்கள். எம்மதமும் சம்மதம் என்று வாழும் சில பாரத மக்களைப் பார்த்து கத்துக்க வேண்டியது இன்னும் இருக்கு வங்கதேசம்


sankar
ஜன 06, 2025 06:49

தீவிரவாதிகளின் கைப்பாவையான யூனுஸ். இவரும் சுடப்பட்டு மரணம் என்று ஒருநாள் செய்தி வரும்.


Senthil
ஜன 07, 2025 16:22

நமது மகாத்மா காந்தியைப் போல் போறறப்படுவார்.


C.SRIRAM
ஜன 06, 2025 02:47

இதனால் தான் பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும் என்பது . இந்த பங்களாதேஷ் தற்காலிக தற்குறி அரசில் உள்ள எல்லாரையும் விரும்பத்தகாத நபர்களாக அறிவிக்க வேண்டும்


M Ramachandran
ஜன 06, 2025 02:42

மத வெரியர்கள் கையில் வங்க தேசம். அதவாது தீவிர அதா நாடான பாகிஸ்தானின் கை பிடியில் வணிக தேசம். நாம் இப்போது பாகிஸ்தானை பிரித்து மேய வேண்டிய நேரம்.


Senthil
ஜன 07, 2025 15:53

மத வெறியர்கள் கையில் வங்கதேசமா? இந்தியாவா? யூனுஸ் மிகச் சிறந்த அறிவாளி, நோபல் பரிசு வென்றவர், தன் நாட்டு மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர், நம்மவர்களைப் போல் போலி பட்டதாரி இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை