உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்

சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்; பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் எழுதிய புத்தகம் இந்தாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதன் மூலம் சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்தவர் பானு முஷ்டாக், மூத்த இலக்கியவாதி, புகழ்பெற்ற எழுத்தாளரான இவர் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல புத்தகங்களை எழுதியவர். 'ஹசீனா மற்றும் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தை, கன்னட மொழியில் எழுதினார். இதை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி என்பவர், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 'ஹார்ட் லேம்ப்' என பெயரிட்டார். இப்புத்தகம், இன்றைய உலகில் வாழும் மனிதர்களின் குணாதிசயங்களை விளக்கும் வகையில் எழுதப்பட்டு இருந்தது. மேலும். ஆங்கில மொழியில் வெளியாகி அதிகம் பேசப்படும் புத்தகங்களில் ஒன்றாக மாறியது.இதையடுத்து, 'தி இங்கிலிஷ் பெண் 2024' என்ற விருதை பெற்றார். அதன் பின்னர், சர்வதேச அளவிலான 'புக்கர் விருதுக்கு' அவரது புத்தகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு புக்கர் பரிசு பட்டியலில் இவரின் ஹார்ட் லேம்ப் என்ற புத்தகத்துடன் சேர்த்து மொத்தம் 6 புத்தகங்கள் போட்டியில் இருந்தன. தற்போது அவரின் இந்த புத்தகம் புக்கர் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எழுத்தாளருக்கு ரூ.56 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும். சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை