உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெல்ஜியம் கார் பந்தயம்; அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடம் பிடித்து அசத்தல்

பெல்ஜியம் கார் பந்தயம்; அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடம் பிடித்து அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ப்ரூசெல்ஸ்: பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி பட வெற்றிக்குப் பிறகு, இன்னும் சில மாதங்களுக்கு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், சினிமாவில் இருந்து தற்காலிமாக விலகுவதாகவும் அஜித் கூறியிருந்தார். இதையடுத்து, மொட்டை அடித்தது போன்ற புது கெட்டப்பில் இருக்கும் அஜித், கார் ரேஸில் மும்முரம் காட்டி வருகிறார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இது குறித்து அஜித் குமார் ரேஸ் அணி வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், 'எங்கள் அணியின் பேபியன், மேதியூ அடங்கிய குழுவினர், மிகவும் கடினமான போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,' என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே, துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் 'அஜித்குமார் ரேஸிங்' அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Karthik
ஜூன் 30, 2025 23:56

உங்களின் விடாமுயற்சி.. நிட்சயம் கிரீடம் சூடும் என்பதை நிரூபித்து இந்திய தாய் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் மிஸ்டர் A K


Kalyan Singapore
ஜூன் 30, 2025 22:26

அஜித் குமாரின் மனைவி முன்னாள் நடிகை ஷாலினி அவரை ஒழுங்காக வழி நடத்துவார் என்று நம்புகிறோம். அரசியல் கட்சி தொடங்கி வாழ்க்கையை வீணடிக்காமல் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு தலைவனாக வாழ என்றும் இறைவனை வேண்டுவோம்


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 30, 2025 16:18

சினிமா நடிகராக இருக்கும் அஜித்குமார் அவர்கள் மற்ற நடிகர்களைபோல் சொகுசு வாழ்க்கை வாழலாம் ஆனால் அவர் அப்படி இல்லாமல் கார் ரேசில் தனது ஓட்டும் திறமையை நன்கு வெளிப்படுத்தி வருகிறார் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், வெல்க


R. SAKTHIVEL
ஜூன் 30, 2025 13:54

விடமுயற்சி விஸ்வரூப வெற்றி சூப்பர் Thala......


Tiruchanur
ஜூன் 30, 2025 13:03

உருப்படியான விஷயம் பண்ணறார். வாழ்த்துக்கள். மக்களை திசை திருப்பாமல் ஒரு நல்ல விஷயம் செய்கிறார். மற்றவர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்


R. SAKTHIVEL
ஜூன் 30, 2025 13:02

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி சூப்பர் Thala.........


Shankar
ஜூன் 30, 2025 12:58

வாழ்த்துக்கள் தல.


Ramesh Sargam
ஜூன் 30, 2025 12:49

இன்னொன்னு இருக்கு, அரசியல் கட்சி ஆரம்பித்து.... என்னாவாகப் போகுதோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை