உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு பலன்: பிரதமர் மோடி

இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு பலன்: பிரதமர் மோடி

லண்டன்: இந்தியா பிரிட்டன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறுகுறுநடுத்தர தொழில்துறையினர் பயனடைவார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.இந்தியா பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரதமர் மோடி கூறியதாவது: இந்த ஒப்பந்தம் சாதாரண பொருளாதார ஒப்பந்தம் மட்டும் கிடையாது. பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. ஒரு புறம், இந்திய ஜவுளித்துறை, காலணி, நகைகள், நவரத்தினங்கள், பிரிட்டன் சந்தையை எளிதில் அணுக முடியும். இந்திய விவசாயப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு பிரிட்டனின் சந்தையில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில்துறையினனுக்கு பலன் கிடைக்கும். மறுபுறம், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பிரிட்டனில் தயாராகும் பொருட்கள் சாதாரண விலையில், இந்திய மக்களுக்கும் தொழில்துறையினருக்கும் கிடைக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m4pnmrip&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆமதாபாத்தில் கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இரு நாட்டு உறவுகளுக்கு இடையே பாலமாக செயல்படுகின்றனர். அவர்கள் இந்தியாவில் இருந்து படைப்பாற்றல், அர்ப்பணிப்பை கொண்டு வந்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு, பிரிட்டனின் பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, விளையாட்டு, கலாசாரம் மற்றும் பொது சேவையிலும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் கூறினார்.

பிரிட்டன் பிரதமர் நன்றி

இதன் பிறகு, பிரிட்டன் பிரதமர் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு கையெழுத்தாகும் முக்கியமான மற்றும் பெரிய ஒப்பந்தம் இதுவாகும். இதுவரை இந்தியா செய்த ஒப்பந்தங்களில் விரிவான மற்றும் முழுமையான ஒன்றாக இது இருக்கும். இதற்காக மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.இந்த ஒப்பந்தத்தால், இரு நாடுகளுக்கும் பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதுடன், மக்களின் வாழ்க்கை தரம் உயரும். ஊழியர்களின் பைகளில் பணம் சேரும். வேலைக்கும், வர்த்தகத்துக்கும் சிறப்பானதாக இருப்பதுடன் வரியை நீக்குவதுடன், வர்த்தகத்தை எளிதாகவும் மாற்றுகிறது பிரிட்டன் ஊழியர்களுக்கு சிறந்ததாக உள்ளது. பிரிட்டனில் விற்பனையாகும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை குறைவதால் நுகர்வோர்களும் பயனடைவார். நீண்ட காலத்துக்கு பலன் அளிக்கும். பிரிட்டன் பொருளாதாரத்துக்கும், மக்களுக்கும் வருமானத்தை கொண்டு வரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

லண்டன் குமார்
ஜூலை 24, 2025 20:11

இந்திய மீனவர்கள் இங்கிலாந்து பக்கம் போய் மீன் பிடிக்கலாமா?


vivek
ஜூலை 24, 2025 23:19

லண்டன் கோமாரூ...கள்ள தோணியில் நீ லண்டன் போனியா


தாமரை மலர்கிறது
ஜூலை 24, 2025 18:56

கடந்த ஐந்தாண்டில் இந்தியர்களின் வருமானம் ஒன்றரை மடங்கு உயர்ந்துவிட்டது. பிரிட்டனுடன் போடப்பட்ட தடையற்ற வர்தகத்தால், இந்தியர்களின் வருமானம் பிரிட்டனுக்கு இணையாக விரைவில் மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.


SUBBU,MADURAI
ஜூலை 24, 2025 16:51

David Cameron 2010-2016, Theresa May 2016-2019, Boris Johnson 2019-2022, Liz Truss 2022-2022, Rishi Sunak 2022-2024, Keir starmer 2024- Incumbent. UK Changed 6 BRITISH PMs. Only 1Prime Minister Since 11 Years. 6 BRITISH PMs = 1 MODI!!


Narayanan Muthu
ஜூலை 24, 2025 20:33

அங்கெல்லாம் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைப்பதில்லை. மேலும் அமலாக்கத்துறை சிபிஐ வருவாய்த்துறை போன்ற துறைகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக வேலை பார்ப்பதில்லை.


Arunkumar,Ramnad
ஜூலை 24, 2025 21:37

அதே போல் உம்மைப் போல அறிவாலயத்திற்கு முட்டுக் கொடுப்பதும் இல்லை என்பதையும் சேர்த்து சொல்..


vivek
ஜூலை 24, 2025 23:20

முத்து ....அப்போ உனக்கும் அதே அலுமினிய தட்டு தானா


சமீபத்திய செய்தி