உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெல்லும் வரை ஆதரவு; உக்ரைன் அதிபருக்கு உத்தரவாதம் தந்தது அமெரிக்கா!

வெல்லும் வரை ஆதரவு; உக்ரைன் அதிபருக்கு உத்தரவாதம் தந்தது அமெரிக்கா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யா உடனான போரில் வெற்றி பெறும் வரை ஆதரவு வழங்குவோம் என அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உறுதி அளித்துள்ளனர்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இது வரை உருப்படியான தீர்வு ஏற்படவில்லை. ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

ஆதரவு நிச்சயம்

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா சென்று, அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை சந்திக்கிறார். இது குறித்து சமூகவலைதளத்தில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள பதிவில், 'அதிபர் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் செப்., 26ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு உட்பட, போரின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள். துணை அதிபர் கமலா ஹாரிசும் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார். உக்ரைன் வெற்றி பெறும் வரை அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் வழங்குவார்கள்' என குறிப்பிட்டுள்ளது.

பைடன் சொல்வது என்ன?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' எனது நண்பர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு விருந்தளிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரது வருகையின் போது, ​​உக்ரைனை போரில் இருந்து பாதுகாக்கும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துவேன்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Nandakumar Naidu.
செப் 21, 2024 02:19

இந்த ஜோ பைடன் என்கிற கிருக்கனின் பேச்சை கேட்டு அழிந்து போக ஒரு கோமாளி கிடைத்து விட்டான். இது உக்ரைன் மக்களுக்கு புரியவில்லை.


RAMAKRISHNAN NATESAN
செப் 20, 2024 14:05

உக்ரைன் ஐ சுடுகாடு ஆக்கிவிட்டுத்தான் அமெரிக்கா அகலும் ........ இது செலன்ஸ்கி என்னும் முட்டாளுக்கு புரியல ......


Anand
செப் 20, 2024 12:37

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உக்ரைனை அழித்துவிடுவார்கள்....


RAJ
செப் 20, 2024 11:28

அதுக்கு நீயே ரஷியக்கூட போர் செய்யலாமே... எதுக்கு நடுவுல உக்ரைன் மக்கள்... எப்டியோ வர டிசெம்பர்ல உனக்கும் உன்கட்சிக்கும் புள் ரெஸ்டத்தேன் ... என்ஜோய் ..


Kumar Kumzi
செப் 20, 2024 11:07

உக்ரைன் அழியும் வரை உதவி என்ற பெயரில் ஆயுத விற்பனை செய்து கொண்டே இருப்போம்


Ganapathy
செப் 20, 2024 10:50

உலகளாவிய வர்த்தக சுழ்நிலையில் இந்த போரால் வீணாவது அமெரிக்காவின் வரி மட்டுமல்ல மறைமுகமாக நமது வரியும்தான்.


ஆரூர் ரங்
செப் 20, 2024 10:48

தலைவர்கள் மக்களை வைத்து விளையாடும் போர் பகடை விளையாட்டு. . அமெரிக்கா ரஷ்யா இரண்டின் ஏகாதிபத்திய மேலாதிக்க எண்ணங்களுக்கும் முடிவு வரும்.கெடுவான் கேடு நினைப்பான்.


yts
செப் 20, 2024 10:18

ஆனால் வெல்ல விடமாட்டோம்


அசோகன்
செப் 20, 2024 09:45

உலகத்தை அழிக்க எப்போதும் என் ஆதரவு உண்டு...... பைடேன் மற்றும் deep state


sankar
செப் 20, 2024 09:21

வேடிக்கை பார்க்கும் அமேரிக்கா


முக்கிய வீடியோ