உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கு ரொம்ப அவமானம் ஆகிவிடும்: புலம்பும் டிரம்ப்

நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கு ரொம்ப அவமானம் ஆகிவிடும்: புலம்பும் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியுயார்க்: நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் புலம்பி தள்ளி வருகிறார்.உலக நாடுகள் இடையே மூண்ட 7 போர்களை நிறுத்திவிட்டேன், 11 போர்களை நிறுத்தி விட்டேன் என்று தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ரஷ்யா, உக்ரைன் போரையும் எப்படியும் நிறுத்திவிடுவேன் என்றும் விடாது கூறி வரும் அவர், உலக நாடுகள் இடையே அமைதியை நிலைநாட்டியதற்கு தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டுக் கொண்டே இருக்கிறார்.அவரின் குரல் நோபல் பரிசு தேர்வு கமிட்டிக்கு கேட்டதோ, இல்லையோ பாகிஸ்தானுக்கு கேட்க, அந்நாடும் டிரம்புக்கு ஆதரவுக்குரல் எழுப்பியது. ஆனாலும் நோபல் பரிசு உண்டா இல்லையா என்பது பற்றிய எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.இந் நிலையில் நோபல் பரிசு தரவில்லை என்றால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகி விடும் என்று டிரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். இஸ்ரேல்-காசா போரை நிறுத்திவிட்டேன், எனவே நோபல் பரிசு தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.டிரம்ப் மேலும் கூறி உள்ளதாவது; நாங்கள் அதை சரி செய்துவிட்டோம். (காசா-இஸ்ரேல் போரை குறிப்பிடுகிறார்) ஹமாஸ் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி ஏற்காவிட்டால் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.அனைத்து அரபு நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் ஒப்புக் கொண்டு இருக்கின்றன. இஸ்ரேல் ஒப்புக்கொண்டுவிட்டடது. அது ஒரு அற்புதமான விஷயம். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

KRISHNAN R
அக் 02, 2025 09:57

பக்கோடா காதர்.... காமெடி


Kalyanaraman
அக் 02, 2025 08:39

தற்போது உள்ள நிலையில் ட்ரம்பே தனது அராஜக நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கு அவமானம் ஆகி வருகிறார்.


S.L.Narasimman
அக் 02, 2025 08:02

முதலில் பயங்கரவாதத்தை நிறுத்த பாரு. அப்புறம் நோபல் பரிசுக்கு ஆசைப்படு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 01, 2025 21:23

நோபல் பரிசு வாங்கா விட்டால் அமெரிக்காவுக்கு அவமானம் நோபல் பரிசு கொடுத்தால் நோபல் பரிசு கமிட்டிக்கு அவமானம். என்ன செய்வது.


தாமரை மலர்கிறது
அக் 01, 2025 20:28

தயவுசெய்து நோபல் பரிசை கொடுத்து இந்த பெரியவரை கொஞ்சம் அமைதி ஆக்குங்கள். புலம்பல் தாங்கமுடியல .


R. SUKUMAR CHEZHIAN
அக் 01, 2025 18:51

கொஞ்சம் கூட தன்மானம் இல்லாதவர் டிரம்ப். கொரோனா காலத்தில் பல ஏழை நாடுகளுக்கு இலவசமாக மருந்து கொடுத்தவர் நமது பிரதமர் திரு. மோடி இவரே பல சாதனைகளை செய்துவிட்டு அமைதியாக இருக்கிறார். உலக நாட்டிற்கு சகட்டு மேனிக்கு வரிபோட்டு நோபல் பரிசு கேட்கிறார்.


vbs manian
அக் 01, 2025 16:27

இப்படி நோ பேல் பரிசுக்காக யாரும் அலைந்ததாக சரித்திரம் இல்லை.


சுந்தர்
அக் 01, 2025 16:17

கவுரவ நோபல் பரிசு குடுத்துச் தொலைச்சுடுங்க. இல்லாட்டி தூங்க விடமாட்டார்.


ஆரூர் ரங்
அக் 01, 2025 16:11

ட்ரம்புக்கு நோபல் பரிசும் ,அன்பில் மகேஸ்


RAMESH KUMAR R V
அக் 01, 2025 15:50

உலக நாடுகளில் இதற்கான தேர்தல் நடத்தவும் வெற்றி பெறுபவர்களுக்கு நோபல் பரிசு கொட்டுக்கவும் மோடி வெற்றி பெறுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை