உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்

டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதிப்பு செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், உலக கோடீஸ்வரர்கள் பல பேர் கோடிக்கணக்கில் சொத்துகளை இழந்துள்ளனர்.அமெரிக்க சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் தினமும் எச்சரிக்கை விடுத்து வந்தார். கூறியபடி உலகின் 180 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்து அமல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தைகளில் நேற்று சரிவு ஏற்பட்டது. இதனுடன் உலக கோடீஸ்வரர்கள் பலர் கோடிக்கணக்கில் சொத்துகளை இழந்துள்ளனர். அவர்களில் பலர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமான தகவல். அவர்களில் முதலாவது இடத்தில் இருப்பவர், பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க். இவர் இழந்த தொகை ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய். இதற்கு அடுத்த இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோஸ் உள்ளார். இவருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 993 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க்கிற்கு 94 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.இவர்களை தவிர்த்து, அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் டெல், லாரி எல்லிசன், ஜென்சன் ஹூவாங், லாரி பேஜ், செர்ஜி பிரின், தாமஸ் பீட்டர்பி ஆகியோருக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவை தாண்டி , பிரான்சின் பெர்னாட் அர்னால்ட்டின் சொத்துகளும் சரிவை சந்தித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

மீனவ நண்பன்
ஏப் 05, 2025 02:28

மார்க்கெட் கடந்த சில வருடங்களாக ஏறுமுகத்திலேயே இருந்தன . மியூச்சுவல் பண்டுகளில் பாமரமக்களும் குடும்பத்தலைவிகளும் முதலீடு செய்து சேமிக்கலாம் என்று கனவில் இருக்கும்போது ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவர்கள் பணத்தை சுரண்ட வூகவணிகத்தை உபயோகிக்கவே பெரிய பெரிய நிறுவனங்கள் உலகம் முழுக்க கடை விரித்திருக்கிறார்கள்


vns
ஏப் 05, 2025 01:52

ஆசிரியர் அவர்களே.. யார் கோடிஸ்வரன் ஆனால் நமக்கென்ன பணம் இழந்தால் நமக்கென்ன. இதுபோன்ற செய்திகள் மேற்கத்திய பாரம்பரியம் நமதல்ல .


Sivagiri
ஏப் 05, 2025 00:41

பெரும்பாலும் இமேஜினரி மதிப்பு . . . நாலைந்து உருளைக்கிழங்கு சிப்ஸ்-ஐ போட்டு வெறும் காற்றடைத்த பாக்கெட் போன்றது . . .


Mediagoons
ஏப் 04, 2025 21:23

சந்தை மதிப்பு குறைந்ததோ ஒரு சில சதவீதம் கூட இல்லை. அதன் மதிப்போ பல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான கோடிகள். உலகின் 80 சதவிகிம் சொத்துக்கள் ஒரு சிலரிடம் குவிந்து கிடக்கிறது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை