உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கோர்ட் வெளியே குண்டு வெடிப்பு: பாகிஸ்தானில்12 பேர் பலி

கோர்ட் வெளியே குண்டு வெடிப்பு: பாகிஸ்தானில்12 பேர் பலி

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இதில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் அருகே இன்று காரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தப்பகுதி, வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வரும் தனிநபர்கள் ஒன்று கூடும் பரபரப்பான பகுதியாகும். குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது. போலீசார் இன்னு உறுதிப்படுத்தவில்லை.அதிகாரிகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 2014 இல் இதேபோன்ற தாக்குதல் அதே நீதிமன்ற வளாகத்தில் நடந்தது, இந்த சம்பவத்தில் ஒரு நீதிபதி உட்பட 11 பேர் பலியானார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை