உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முடிவுக்கு வந்தது எல்லை மோதல்; தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்தம் அமல்

முடிவுக்கு வந்தது எல்லை மோதல்; தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்தம் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சுரின்: பல நாட்கள் நீடித்த எல்லை மோதல்களுக்குப் பிறகு, தாய்லாந்து, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இது கடந்த ஜூலை 24ல் மோதலாக வெடித்தது. அப்போது எல்லையில் கண்ணி வெடியில் சிக்கி தாய்லாந்து வீரர்கள் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.இதையடுத்து கம்போடியா மீது ஏவுகணைகளை வீசியது தாய்லாந்து. பதிலுக்கு கம்போடியாவும் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hp300mob&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமான பிரசாத் தா முயன் தோம் கோவில் மீது, பிஎம் -21 ரக ராக்கெட்டுகளை ஏவியதாக தாய்லாந்து கூறியுள்ளது. ஹிந்து - புத்த கோவிலான இதை இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.மறுபுறம் நீண்ட துார இலக்குகளை குறிவைக்கும் பீரங்கிகளை பயன் படுத்தி தங்கள் நாட்டு எல்லைக்குள் ஏவுகணைகளை தாய்லாந்து ஏவியதாக கம்போடியா கூறியது.இதற்கிடையே தாய்லாந்து கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.போர் நிறுத்தம் அமல் இந்நிலையில், சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இரு நாட்டு தலைவர்களும் இன்று மலேஷியாவில் சந்தித்து பேச்சு நடத்தினர். பின்னர், தாய்லாந்தும், கம்போடியாவும் தங்கள் பல நாட்களாக நீடித்த எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மலேசியா மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஜூலை 29, 2025 04:07

இதற்க்காகவாவது டிரம்பருக்கு ஒரு யுனஸ்க்கோ விருது கொடுக்கலாம் - கீரைமணி.


Ramesh Sargam
ஜூலை 28, 2025 20:17

இந்த போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் தான்தான் காரணம் என்று பிதற்றுவாரே. இந்தியா - பாக்கிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் தான் காரணம் என்று இன்றும் சொல்லிக்கொண்டு திரிகிறார்.


KRISHNAN R
ஜூலை 28, 2025 17:40

டிரம்ப் டிரம்ப்


Anand
ஜூலை 28, 2025 16:27

இந்த போர் நிறுத்தத்திற்காவது ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்குமா?


Senthoora
ஜூலை 28, 2025 17:23

ஒரு மனிதனின் முடிவு, சிவன் மீது கை வைக்கும்போது, இப்போ ட்ரம்பின் ஆட்டம் சீக்கிரம் முடியப்போகுதுனு அர்த்தம், முடிவும் கேள்வியே,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை