உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கப்பலை காப்பாற்ற துணிச்சலான செயல்பாடு: இந்திய கேப்டனுக்கு சர்வதேச விருது!

கப்பலை காப்பாற்ற துணிச்சலான செயல்பாடு: இந்திய கேப்டனுக்கு சர்வதேச விருது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ.,) சார்பில் வழங்கப்பட்ட, அசாதாரண துணிச்சலுக்கான விருதை, இந்திய கேப்டன் அவிலாஷ் ராவத் பெற்றுக் கொண்டார்.நேற்று மாலை லண்டனில் உள்ள ஐ.எம்.ஓ., தலைமையகத்தில் இந்த விருது வழங்கப்பட்டது. மர்லின் லுவாண்டா என்ற வணிக கப்பலின் கேப்டனாக அவிலாஷ் ராவத் பணியாற்றி வந்தார்.இந்த கப்பல், ஜனவரி மாதம் 84 ஆயிரம் டன் நாப்தா பாரம் ஏற்றிக்கொண்டு செங்கடல் வழியாக சென்றபோது, பயங்கரவாதிகளால் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் கப்பலின் சரக்கு இருப்பு பகுதியில் தீப்பற்றிக் கொண்டது.தீயை அணைக்கவும், கப்பலை காப்பாற்றவும், அவிலாஷ் ராவத் தலைமையிலான கப்பல் பணியாளர்கள், நான்கரை மணி நேரம் கடலில் போராடினர். அதன்பிறகே, அவர்களுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் கடற்படை கப்பல் உதவி கிடைத்தது.உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும், கப்பலை காப்பாற்ற போராடிய குழுவினரை கவுரவிக்கும் நோக்கில் இந்த விருது அவிலாஷ் ராவத்துக்கு வழங்கப்பட்டது.இந்த கப்பலின் பாதுகாப்புக்காக விரைந்து செயல்பட்ட இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் குழுவின் கேப்டன் பிரிஜேஷ் நம்பியார் உள்ளிட்டோருக்கும் பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பேசிய அவிலாஷ் ராவத், ஆபத்தில் உதவிய இந்தியா, பிரான்ஸ், அமெரிக்க கடற்படைகளுக்கு நன்றி தெரிவித்தார். செங்கடல் வழியாக கப்பல் அனுப்புவதை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Subramanian
டிச 05, 2024 09:38

கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.


PR Makudeswaran
டிச 04, 2024 11:09

நம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கவில்லை என்று என்ன நிச்சயம், என்ன உறுதி


Ram
டிச 04, 2024 07:13

இதற்கு இந்திராவுடன் கூட்டு சேர்ந்து கருணா கட்ச தீவை தாரை வார்த்தைதான் குறை சொல்லவேண்டும், இலங்கை கடல் எல்லையில் போய் மீன்பிடித்தல் இந்திய அரசாங்கம் என்ன செய்ய முடியும் ....


J.V. Iyer
டிச 04, 2024 05:20

அப்படியே அவரை பங்கதேஷுக்கு அனுப்பலாமே?


சாண்டில்யன்
டிச 03, 2024 22:17

இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களிடமிருந்து தமிழ்நாட்டு மீனவர் படகுகளை காப்பாற்றத்தான் இந்திய கப்பற்படை வருவதில்லை என்பது சோகம்


Sathyanarayanan Sathyasekaren
டிச 03, 2024 22:48

சாண்டில்யன், உண்மைகள் பெயரில் கருத்து எழுத்த வக்கில்லாமல் புனை பெயரில் எழுதுகிறாய். மீனவர் போர்வையில் கடத்தல் செய்யும் கும்பலை என்ன செய்ய?


Kassalioppilan
டிச 03, 2024 23:01

உண்மை தான்


Kassalioppilan
டிச 03, 2024 23:02

Yes


K V Ramadoss
டிச 04, 2024 01:31

கடத்தலில் ஈடுபடுபவர்களை நம் கடற்படை காக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா ?


Anand
டிச 04, 2024 10:49

மோடி ஆட்சிக்கு வருமுன் தமிழக மீனவர்கள் தினமும் ஏதோ ஒரு வகையில் இலங்கை கடற்படையின் தாக்குதல்களால் செத்துக்கொண்டிருந்தார்கள், காரணம் அப்போதைய காங்கிரஸ் அரசும் சிங்கள அரசும் கைகோர்த்து தமிழர்களை கொல்வதில் முனைப்பு காட்டினார்கள், மோடி அவர்கள் பதவியேற்ற நாள் முதல் அது நின்றுவிட்டது, இப்போது நடப்பது எல்லை தாண்டிய மீனவர்களை கைது செய்வது மட்டுமே, பிறகு விட்டு விடுகிறார்கள், உலகத்தில் எந்த நாடும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இதை தான் செய்யும். காரணம் எல்லை தாண்டி வருபவர்கள் மீனவர்களா அல்லது நாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் சதிகாரர்களா என யார் அறிவர்.


NS நாயுடு
டிச 04, 2024 15:10

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை, இலங்கை இராணுவம் சுடுவது, கைது செய்வது நமக்கு அவமானம். எனவே மீனவர் போர்வை எல்லை தாண்டும் இந்திய கடத்தல் நாய்களை இந்திய கடலோர காவல் படை சுட்டுக் கொள்ள வேண்டும். இவனுகள பிடிச்சு கோர்ட் கேசுன்னு நேரத்தை வீணாக்க வேண்டும். கண்டதும் சுட்டுத் தள்ளுவதே தீர்வாகும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை