உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரேசிலை உலுக்கிய சாலை விபத்து; லாரி மீது பஸ் மோதியதில் 37 பேர் பரிதாப பலி

பிரேசிலை உலுக்கிய சாலை விபத்து; லாரி மீது பஸ் மோதியதில் 37 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரேசிலா: 'பிரேசிலில் லாரி மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.பிரேசிலில் மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து சால் பாலோ நகர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 45 பேர் பயணம் மேற்கொண்டனர். தியொபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது பஸ் டயர் வெடித்தது. நிலை தடுமாறிய பஸ், அந்த வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 38 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். விபத்து குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பிரேசில் அதிபர் லூலா டா சில்வா இரங்கல் தெரிவித்து உள்ளார். நடப்பாண்டில் மட்டும் சாலை விபத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ