உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  கட்டிய சில வாரங்களில் சீனாவில் நொறுங்கிய பாலம்

 கட்டிய சில வாரங்களில் சீனாவில் நொறுங்கிய பாலம்

பீஜிங்: சீனாவில் புதிதாக கட் டப்பட்ட ஹாங்கி பாலம் , திறக்கப்பட்ட ஆறு வாரங்களுக்குள்ளேயே இடிந்து விழுந்தது. நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில், மத்திய சீனாவையும், திபெத்தையும் இணைக்கும் வகையில், 2,500 அடி நீளத்தில் ஹாங்கி பாலம் கட்டப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியாக, 2,500 அடி ஆழமுடைய பள்ளத்தாக்கை கடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் துாண்கள் 570 அடி உயரம் கொண்டவை. கடந்த ஆறு வாரங்களுக்கு முன்புதான் ஹாங்கி பாலம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மேர்காங் நகரில் நெடுஞ்சாலையையொட்டி ஹாங்கி பாலப் பகுதியின் வலது கரையில் விரிசல்கள் இருப்பதை இரண்டு தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதையடுத்து பாலம் மூடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. கட்டுமானத்திற்கு பெயர் போன சீனாவிலேயே புதிய பாலம் இடிந்து விழுந்தது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிக நில அதிர்வு மற்றும் நிலச்சரிவு ஆபத்து நிறைந்த புவியியல் அமைப்பு கொண்ட திபெத் நிலப்பகுதியில் பாலம் கட்டப்பட்டதே விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை