உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு 286 மில்லியன் டாலர் நிதி; பிரிட்டன் அறிவிப்பு

உக்ரைனுக்கு 286 மில்லியன் டாலர் நிதி; பிரிட்டன் அறிவிப்பு

லண்டன்: ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் ராணுவத்திற்கு 286 மில்லியன் டாலர் நிதியுதவியை பிரிட்டன் அறிவித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் அணிகளுக்கு இடையிலான போர் 1,000 நாட்களை கடந்து நடந்து வருகிறது. போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இருதரப்பிலும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிரிட்டன் பாதுகாப்புத்துறை செயலர் ஜான் ஹீலே, நேற்று உக்ரைன் தலைநகர் கிவிக்கு சென்றார். அங்கு உக்ரைன் அதிகாரிகளை சந்தித்து, 2025ல் உக்ரைனுக்கு பிரிட்டன் வழங்கும் ஆதரவு குறித்து பேசினார். அப்போது, அடுத்த ஆண்டு உக்ரைன் ராணுவத்திற்கு 286 மில்லியன் டாலருக்கு நிதியுதவி வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. உக்ரைன் கடற்படையை வலுப்படுத்தும் விதமாக, சிறிய படகுகள், ட்ரான்கள் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு தேவையான ஆயுதங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஜான் ஹீலே கூறுகையில், 'உக்ரைனுக்கு பிரிட்டன் தோளோடு தோள் கொடுக்கும். இந்தப் போரில் புடினால் வெற்றி பெற முடியாது,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
டிச 19, 2024 19:58

ஒருபுறம் இந்தியா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது. மறுபுறம் பிரிட்டன், அமெரிக்கா இப்படி போரிடும் நாடுகளுக்கு உதவி செய்து, போரை வளர்த்துக்கொண்டிருக்கிறது.


முக்கிய வீடியோ