உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலில் தங்கள் நாட்டு எம்.பி.,க்கள் 2 பேர் கைது: பிரிட்டன் கண்டனம்

இஸ்ரேலில் தங்கள் நாட்டு எம்.பி.,க்கள் 2 பேர் கைது: பிரிட்டன் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன் :பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்ட எங்களது நாட்டின் எம்.பி.,க்களை இஸ்ரேல் போலீஸ் கைது செய்து, சிறிது நேரம் தடுத்து வைத்ததைமுற்றிலும் ஏற்க முடியாதது என்று பிரிட்டன் கண்டித்துள்ளது. இஸ்ரேல் பார்லிமென்ட் அருகே பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த யுவான் யாங், மற்றும் அப்திசாம் முகமது ஆகியோர் லண்டனில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் நாட்டிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்த வெளியிட்டுள்ளன. பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி கூறியதாவது:இஸ்ரேல் எங்கள் நாட்டு எம்பிக்களை தடுத்து நிறுத்தி, அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.இஸ்ரேலிய அரசாங்கத்தில் உள்ள எனது சகாக்களுக்கு, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இப்படி நடத்தக்கூடாது என்பதை நான் தெளிவுபடுத்தியுள்ளேன், மேலும் எங்கள் ஆதரவை வழங்குவதற்காக இன்றிரவு இரு எம்.பி.க்களையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்.இஸ்ரேல் எடுத்த போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதை உறுதி செய்வதற்கும், ரத்தக்களரியை நிறுத்துவதற்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இங்கிலாந்து அரசாங்கத்தின் கவனம் தொடர்கிறது. இந்நிலையில் இது சர்வதேச விதிமுறைகளின் மீறல் ஆகும். இவ்வாறு டேவிட் லாம்மி கூறினார்.இதற்கிடையே இஸ்ரேல் எடுத்த இந்த நடவடிக்கையில் தாங்கள் வியப்படைந்ததாக அந்த இரண்டு எம்.பி.க்களும் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

B MAADHAVAN
ஏப் 08, 2025 00:10

உங்கள் நாட்டை சேர்ந்த எம்பி க்கள் வேறொருவர் நாட்டிற்கு சென்று போராட்டத்தில் பங்கு பெற இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், நாட்டின் பெருமையை காப்பாற்ற அவர்களை தடுத்து அறிவுரை கூறியிருக்க வேண்டும். அதை செய்யாதது பிரிட்டன் தவறு. அதைவிட்டு, அவர்கள் நாட்டில் சென்று போராடியவர்களை கைது செய்து சரியான நடவடிக்கை எடுத்த இஸ்ரேல் நாட்டை குறை கூற பிரிட்டனுக்கு யோக்கியதை இல்லை. கைது செய்யப் பட்ட எம்பி க்களை, விடுதலை செய்திருக்க கூடாது. பிடித்து உள்ளே போட்டு இரண்டு கும்மு கும்ம வேண்டும். இது ஓர் பாடமாக இருக்க வேண்டும்.


Anand
ஏப் 07, 2025 11:13

அந்த இருவரையும் சுட்டுக்கொல்லாமல் கைது செய்தது மிகப்பெரிய தவறு...


பேசும் தமிழன்
ஏப் 07, 2025 08:51

ஏண்... உங்கள் நாட்டு MP க்களுக்கு... அடுத்த நாட்டு பேராட்டத்தில் என்ன வேலை... அது அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவது போல் அல்லவா ஆகி விடும்.


Ganesan GV
ஏப் 07, 2025 06:34

எந்த நாட்டுக்கு எப்போது பிரிட்டன் விசா வாங்கி கொண்டு போய் அங்கிருக்கும் விலை மதிப்பில்லா சொத்துக்களை ஆட்டையை போட்டது


Kasimani Baskaran
ஏப் 07, 2025 03:57

அரசு முறை விசா என்பது போராட அனுமதிக்காது... இதே போல பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான வெளிநாட்டினர்களுக்கு அங்கு வந்து போராட விசா கொடுப்பார்களா?


Pollachi tamilan
ஏப் 06, 2025 23:18

இன்னும் இந்த பிரிட்டன் பெரிய அண்ணன் நினைப்பிலே இருக்கு போல. போராட்டம் பண்ணுறவன் உன்னோட நாட்டுல பண்ணு , அது என்ன அவன் நாட்டில போயி அவனுக்கு எதிரா பண்ணுனா ,பார்த்துகிட்டு அவன் சும்மா இருப்பானா , பிரிட்டன் பொருளாதாரமே மந்தமா, புது வேலைவாய்ப்பு இல்லாம சீரழிஞ்சு கிட்டு இருக்கு. இதுல அடுத்த நாட்டில போய் கிழிக்கப்போறாங்களாம்.


vns
ஏப் 06, 2025 22:51

பிரிட்டன் பாவம். இன்னமும் தங்களை வல்லரசு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறது


SENTHIL NATHAN
ஏப் 06, 2025 22:46

லன்டணில் பெறும்பான்மை பரப்பளவு மோஸுளீமுகலாள் ஆக்ரமிப்பு செய்ய பட்டுள்ளது. இந்துஸ்தானத்தை மதத்தின் பெயரால் பல லட்சக்கணக்கான இந்துக்களை பலியிட்டு செய்த தேசபிரிவினையாகிய கர்மா பிரிட்டனை பதம் பார்த்து கொன்டுல்லது.


Gokul Krishnan
ஏப் 06, 2025 22:40

இஸ்ரேல் செய்தது முற்றிலும் சரி மர மண்டை பிரிட்டிஷ் ஆளும் உறுப்பினர்கள் இதை உணர வேண்டும் என்றே தான் செய்து உள்ளனர் . இங்கிலாந்து நாடாளுமன்றம் முன் இங்கிலாந்து ஆளும் அரசுக்கு எதிராக பிற நாட்டு எம் பி க்கள் போராட்டம் செய்தால் இவர்கள் பார்த்து கொண்டு இருப்பார்களா


theruvasagan
ஏப் 06, 2025 22:23

கைது செஞ்சு பிறகு விட்டிருக்க கூடாது. ஒரு ஆறு மாசம் ஜெயில்ல வச்சு களி திங்க வச்சிருக்கணும். கண்டவனெல்லாம் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை இஸ்ரேல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.


புதிய வீடியோ