உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் மன்னருக்கு அடுத்த வாரம் புராஸ்டேட் வீக்க அறுவை சிகிச்சை :

பிரிட்டன் மன்னருக்கு அடுத்த வாரம் புராஸ்டேட் வீக்க அறுவை சிகிச்சை :

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸூக்கு அடுத்த வாரம் புராஸ்டேட் வீக்க அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார்லஸாக முடிசூட்டிக்கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மன்னர் மூன்றாம் சார்லஸ் புராஸ்டேட் சுரப்பியில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக அவதியுற்று வந்ததாகதாக கூறப்படுகிறது. இதை குணப்படுத்த அடுத்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகவும், இதையடுத்து மன்னரின் அனைத்து பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அரண்மணை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதே போன்று சார்லஸின் மருமகளும், இளவரசர் வில்லியம் மனைவியுமான கேட் மிடில்டனுக்கும் வயிற்றில் கட்டி அகற்றவதற்காக லண்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நரேந்திர பாரதி
ஜன 19, 2024 16:23

செலவு சொந்த காசுலயா? இல்ல, வழக்கம் போல பொதுமக்கள் வரிப் பணமா?


duruvasar
ஜன 19, 2024 10:15

இது என்ன மன்னர்களின் அறுவை சிகிச்சை வருடமா ?


வெகுளி
ஜன 19, 2024 05:00

உலக அழகி போசு குடுக்குற மாதிரி இதென்ன கெட்டப்பு?...


Ramesh Sargam
ஜன 19, 2024 00:17

சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை