உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு; 3 பேர் கவலைக்கிடம்; 2 பேர் கைது

பிரிட்டன் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு; 3 பேர் கவலைக்கிடம்; 2 பேர் கைது

லண்டன்: லண்டனில் இந்திய உணவகத்திற்கு தீ வைக்கப்பட்டதில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். இதில் மூன்று பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கிழக்கு லண்டனில் 'இண்டியன் அரோமா' என்ற இந்திய உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், தீ வைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். தீ விபத்தில் உணவகம் பெருமளவில் சேதமடைந்தது. அங்கு உணவருந்திக் கொண்டிருந்த மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில், மூன்று பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிசிடிவி காட்சி அடிப்படையில், தீ வைத்ததாக 15 வயது சிறுவனும், 54 வயது நபரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ