உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் பிரதமர் ஸ்டாமரின் முதலீட்டு திட்டங்களால் 6,900 பேருக்கு வேலைவாய்ப்பு

பிரிட்டன் பிரதமர் ஸ்டாமரின் முதலீட்டு திட்டங்களால் 6,900 பேருக்கு வேலைவாய்ப்பு

லண்டன்: இந்தியாவுடன், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் மேற்கொண்டு உள்ள 64 முதலீடு திட்டங் களால், அந்நாட்டில் 6,900 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியா வந்துள்ள ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், 64 முதலீடு திட்டங்களில் கையெழுத்திட்டார். இதன் வாயிலாக, எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள், செமி - கண்டக்டர்கள், விவசாய கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில், பிரிட்டனில் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன. அத்துடன், 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டங்கள் வாயிலாக, பிரிட்டனில் 6,900 பேர் புதிதாக வேலைவாய்ப்பை பெறுவர் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது: இந்தியாவில் கையெழுத்தான முதலீடு திட்டங்கள், உலகளாவிய நிலை மற்றும் பொருளாதார ஆற்றலுக்கு ஒரு சக்திவாய்ந்த அங்கீகாரம்; இது, பிரிட்டனில் 6,900 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மின்சார வாகனங்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், இரு நாட்டின் வர்த்தக வளர்ச்சியை அதிகரித்து முன்னேற்றத்துக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை